ஆப்கானிஸ்தான் அணியை சிதறடித்த நீசம், பெர்குசன்...

Pravin
நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்
நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்

கிரிக்கெட் விளையாடின் பிரமாண்ட தொடரான உலககோப்பை தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த உலககோப்பை தொடரின் 13வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள டௌன்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. நியூசிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா மற்றும் நூற் அலி ஜத்ரான் இருவரும் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்த போதிலும் ஹஸ்ரதுல்லா 34 ரன்னில் ஜீம்மி நீசம் பந்தில் அவுட் ஆக நூற் அலி ஜத்ரானும் 31 ரன்னில் பெர்குசன் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா டக்அவுட் ஆக ஆப்கானிஸ்தான் அணி 66 ரன்னிலேயே மூன்று விக்கெட்களை இழந்தது.

பெர்குசன்
பெர்குசன்

அதன் பின்னர் களம் இறங்கிய ஷஹிடி மட்டும் நிலைத்து விளையாட மறுமுனையில் களம் இறங்கிய நயிப் 4 ரன்னிலும் நபி 9 ரன்னிலும் அடுத்தடுத்து நீசம் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த நஜிபுல்லாஹ் 4 ரன்னில் அதே நீசம் பந்தில் அவுட் ஆகி வெளியேற ஜீம்மி நீசம் 5 விக்கெட்களை கைப்பற்றினார். இதை அடுத்து நிலைத்து விளையாடிய ஷஹிடி மட்டும் அரைசதம் விளாசினார். அவரும் 59 ரன்னில் பெர்குசன் பந்தில் அவுட் ஆக ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்களை மட்டுமே அடித்து. நியூசிலாந்து அணியில் நீசம் 5, பெர்குசன் 4, டி கிராண்டோகோம் 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதை தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக மார்டின் கப்தில் டக்அவுட் ஆகினார். அதன் பின்னர் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய கொலின் முன்ரோ 22 ரன்னில் அஃப்தாப் ஆலம் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ரோஸ் டெய்லர் மற்றும் கேப்டன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் வில்லியம்சன் அரைசதம் அடித்தார்.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

நிலைத்து அதிரடியாக விளையாடிய ரோஸ் டெய்லர் 48 ரன்னில் அஃப்தாப் ஆலம் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய டாம் லெதம் நிலைத்து விளையாட தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய வில்லியம்சன் கடைசி வரை களத்தில் இருந்து 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி 32.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜீம்மி நீசம் தேர்வு செய்யப்பட்டார். நியூசிலாந்து அணி விளையாடி முன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil