உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரின் மூன்றாவது போட்டி இன்று இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், போல்ட், கப்தில் போன்ற அனுபவ வீரர்களுடன் களம் இறங்கியது. முதலில் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் திமுத் கருணரத்னே மற்றும் திரிமனே இருவரும் களம் இறங்கினர்.
ஆட்டத்தின் முதல் ஓவரை நியூசிலாந்து அணியின் மாட் ஹென்றி வீசினார். முதல் ஓவரில் இரண்டாவது பந்திலேயே திரிமனே 4 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய குசல் பெரேரா சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் பெரேரா 29 ரன்னில் மாட் ஹென்றி பந்தில் அவுட் ஆகிய நிலையில் அடுத்து களம் இறங்கிய குசல் மென்டிஸ் அடுத்த பந்திலேயே டக்அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய தனஜேயா டி சில்வா 4 ரன்னில் லாக்கி பெர்குசன் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய ஆன்ஜிலோ மேத்யூஸ் டி கிராண்டோகோம் பந்தில் டக்அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ஜீவண் மென்டிஸ் 1 ரன்னில் லாக்கி பெர்குசன் பந்தில் அவுட் ஆகினார். இலங்கை அணி 60-6 என்ற மோசமான நிலைக்கு சென்றது. கேப்டன் கருணரத்னே மட்டும் ஒரு முனையில் நிலைத்து விளையாடிய நிலையில் மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினர். அதன் பின்னர் களம் இறங்கிய திசேரா பெரேரா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் 27 ரன்னில் பெரேராவும் சாட்னர் பந்தில் அவுட் ஆக இலங்கை அணியின் நிலையில் மிகவும் மோசமானத்தாக மாறியது.
அடுத்து களம் இறங்கிய உதானா ஜீம்மி நீஷம் பந்தில் டக்அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய லக்மல் 7 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து நிலைத்து விளையாடிய கேப்டன் கருணரத்னே அரைசதம் அடித்தார். இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியில் ஹென்றி-3, பெர்குசன்-3, போல்ட்-1, டி கிராண்டோகோம்-1, சாட்னர்-1, நீஷம்-1.
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் கொலின் முன்ரோ இருவரும் களம் இறங்கினர். முதல் ஓவரை வீசிய மலிங்காவின் முதல் பந்திலேயே கப்திலின் விக்கெட்டை தவறவிட்டது இலங்கை அணி. அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கப்தில்-முன்ரோ ஜோடி கடைசி வரை விக்கெட் இழக்காமல் வெற்றி இலக்கை எட்டியது இந்த ஜோடி. சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கப்தில் 73 ரன்களும் முன்ரோ 58 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மாட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார்.