உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த உலககோப்பை தொடரில் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இதில் 41 லீக் போட்டிகள் இதுவரை முடிவடைந்துள்ளன. இந்த உலககோப்பை தொடரின் 42 வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இந்த இரு அணிகளும் ஏற்கனவே இந்த உலககோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பினை இழந்த நிலையில் இந்த இரு அணிகளின் கடைசி லீக் போட்டி இதுவாகும்.
ஆப்கானிஸ்தான் அணி இந்த உலககோப்பை தொடரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியையே தழுவி உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த நிலையில் இந்த போட்டியால் எந்த மாற்றமும் எற்படாது என்ற போதிலும் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு இருந்தது ஏன் எனில் இந்த போட்டியுடன் மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு பெற உள்ளதால் இந்த போட்டியை காண அவரின் ரசிகர்கள் குவிந்தனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லிவிஸ் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தடுமாறிய கிறிஸ் கெய்ல் தனது கடைசி உலககோப்பை போட்டியில் 7 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய ஷாய் ஹோப் எவின் லிவிஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் எவின் லிவிஸ் 58 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஹெட்மயர் நிலைத்து விளையாட மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஷாய் ஹோப் அரைசதம் விளாசினார்.
அதை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த ஹெட்மயர் 39 ரன்னில் தவுலட் ஜாட்ரன் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் நிலைத்து விளையாட மறுமுனையில் சிறப்பாக விளையாடி ஷாய் ஹோப் 77 ரன்னில் முகமது நபி பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் பூரனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் சேர்த்த நிலையில் 49வது ஓவரில் அடுத்தடுத்து நிக்கோலஸ் பூரன் 58 ரன்னிலும் கேப்டன் ஹோல்டர் 45 ரன்னிலும் அவுட் ஆகினர். இதை தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 311 ரன்களை குவித்தது.
அதன் பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் குல்பூதின் நயிப் மற்றும் ரஹமத் ஷா இருவரும் களம் இறங்கினர். இந்த இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் குல்பூதின் நயிப் 5 ரன்னில் கீமோ ரோச் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய இளம் வீரர் இங்ரம் அலி கில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 133 ரன்களை குவித்தது. இதில் ரஹமத் ஷா அரைசதம் விளாசிய நிலையில் 62 ரன்னில் ப்ராத்வெயிட் பந்தில் அவுட் ஆகினார்.
அதை தொடர்ந்து களம் இறங்கிய நஜிபுல்லா நிலைத்து விளையாட இங்ரம் அலி கில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த நிலையில் 86 ரன்னில் கிறிஸ் கெய்ல் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து நஜிபுல்லாவும் 31 ரன்னில் ரன்அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய நட்சத்திர வீரர்கள் முகமது நபி மற்றும் சின்வாரி ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்களை இழக்க ஒரு முனையில் அஸ்கர் மட்டும் நிலைத்து விளையாடினார். அஸ்கரும் 40 ரன்னில் ப்ராத்வேயிட் பந்தில் அவுட் ஆக ரஷித் கான் மற்றும் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி இந்த போட்டியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஷாய் ஹோப் (77) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.