அதன் பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் குல்பூதின் நயிப் மற்றும் ரஹமத் ஷா இருவரும் களம் இறங்கினர். இந்த இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் குல்பூதின் நயிப் 5 ரன்னில் கீமோ ரோச் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய இளம் வீரர் இங்ரம் அலி கில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 133 ரன்களை குவித்தது. இதில் ரஹமத் ஷா அரைசதம் விளாசிய நிலையில் 62 ரன்னில் ப்ராத்வெயிட் பந்தில் அவுட் ஆகினார்.
அதை தொடர்ந்து களம் இறங்கிய நஜிபுல்லா நிலைத்து விளையாட இங்ரம் அலி கில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த நிலையில் 86 ரன்னில் கிறிஸ் கெய்ல் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து நஜிபுல்லாவும் 31 ரன்னில் ரன்அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய நட்சத்திர வீரர்கள் முகமது நபி மற்றும் சின்வாரி ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்களை இழக்க ஒரு முனையில் அஸ்கர் மட்டும் நிலைத்து விளையாடினார். அஸ்கரும் 40 ரன்னில் ப்ராத்வேயிட் பந்தில் அவுட் ஆக ரஷித் கான் மற்றும் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி இந்த போட்டியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஷாய் ஹோப் (77) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.