உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த முறை உலககோப்பை கிரிக்கெட் தொடர் ரவுண்டு ராபின் முறையில் நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர்.
இந்த உலககோப்பை தொடரின் பயிற்சி போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 7வது பயிற்சி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் திரிமனே மற்றும் கேப்டன் கருணாரத்னே இருவரும் களம் இறங்கினர்.
கேப்டன் கருணாரத்னே 16 ரன்னிலேயே கேன் ரிச்சர்ட்சன் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய குசல் பெரேரா 12 ரன்னில் மேக்ஸ்வெல் சுழலில் வீழ்ந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய குசல் மென்டிஸ் சிறிது நேரம் நிலைத்து விளையாட மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய திரிமனே அரைசதம் கடந்தார். திரிமனே அதே வேகத்தில் 56 ரன்னில் நதன் லயன் பந்தில் அவுட் ஆகினார். அதற்கு களம் இறங்கிய மேத்யூஸ் சிறிது நேரம் நிலைத்து நிற்க மறுமுனையில் குசல் மென்டிஸ் 24 ரன்னில் ஆடம் ஜாம்பா பந்தில் அவுட் ஆகினார்.
இதை அடுத்து மேத்யூஸ் 17 ரன்னில் ஸ்டிவென் ஸ்மித் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜீவண் மென்டிஸ் மற்றும் தனஜெயா டி சில்வா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். நிலைத்து விளையாடிய ஜீவண் மென்டிஸ் 21 ரன்னில் ஜாம்பா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய டி சில்வாவும் 43 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகினார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 239-8 ரன்களை சேர்த்துது.
அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் காவாஜா இருவரும் களம் இறங்கினர். கேப்டன் பின்ச் வழக்கம் போல் 11 ரன்னிலேயே பிரதீப் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய சான் மார்ஷ் காவாஜாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மார்ஷ் 34 ரன்னில் டி சில்வாவிடம் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 36 ரன்னில் சிரிவர்தனா பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய ஸ்டோனிஸ் அதிரடியாக 32 ரன்கள் அடித்த வண்டேர்சி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய காவாஜா அரைசதம் கடந்து 89 ரன்னில் வண்டேர்சி பந்தில் அவுட் ஆகினார். ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கை 44.5 ஓவரிலேயே எட்டியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.