தென் ஆப்ரிக்கா அணியின் பந்து வீச்சில் திணறிய இலங்கை அணி

Pravin
பாப் டுப் ப்ளாஸிஸ்
பாப் டுப் ப்ளாஸிஸ்

உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்த முறை உலககோப்பை தொடர் ரவுண்டு ராபின் முறையில் நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர். உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஷிம் அம்லா மற்றும் மார்க்ரம் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது தென் ஆப்ரிக்கா அணி. மார்க்ரம் 21 ரன்னில் லக்மல் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த கேப்டன் பாப் டுப் ப்ளஸிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுமுனையில் ஹஷிம் அம்லா அரைசதம் வீளாச 65 ரன்னில் அம்லா ஜீவன் மென்டிஸ் பந்தில் அவுட் ஆகினார்.

ஹஷிம் அம்லா 65
ஹஷிம் அம்லா 65

அதன் பின்னர் வந்த வென் டெர் டுஸ்ஸென் நிலைத்து விளையாட பாப் டுப் ப்ளஸிஸ் அரைசதம் வீளாசினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் ப்ளஸிஸ் 88 ரன்னில் டி சில்வா பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து வந்த மில்லர் 5 ரன்னில் உதனா பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த டுமினி நிலைத்து விளையாடிய நிலையில் டெர் டுஸ்ஸென் 40 ரன்னில் பிரதீப் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய பெலுகுவாயோ நிலைத்து விளையாட டுமினி 22 ரன்னில் லக்மல் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக விளையாட தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 338 ரன்களை குவித்தது.

தென் ஆப்ரிக்கா அணி
தென் ஆப்ரிக்கா அணி

அதன் பின்னர் விளையாடிய இலங்கை அணியில் தொடக்கமே அதிர்ச்சியில் ஆரம்பித்தது. குசல் பெரேரா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க கேப்டன் கருணரத்னே பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அடுத்து வந்த திரிமனே 10 ரன்னில் லுங்கி இங்கிடி பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய குசல் மென்டிஸ் 37 ரன்னில் பெலுகுவாயோ பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த மேத்யூஸ் நிலைத்து விளையாடினார்.

பெலுகுவாயோ
பெலுகுவாயோ

கேப்டன் கருணரத்னே 87 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து டி சில்வா, ஜிவன் மென்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக இலங்கை அணி 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்ரிக்கா அணியில் பெலுகுவாயோ 4 விக்கெட்களை வீழ்த்தினார். தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது பயிற்சி போட்டியில் வெற்றி பெற்றது.

Quick Links

App download animated image Get the free App now