டிரென்ட் போல்ட் பந்து வீச்சில் சிதறிய இந்திய அணி

Pravin
டிரென்ட் போல்ட்
டிரென்ட் போல்ட்

உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த உலககோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர். வரும் மே 30ம் தேதி உலககோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் பயிற்சி போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த பயிற்சி போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். ஆனால் டிரென்ட் போல்ட்டின் ஸ்விங்க் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ரோஹித் சர்மா 2 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து ஷிகார் தவணும் 2 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி சிறிது நேரம் நிலைத்து விளையாட மறுமுனையில் களம் இறங்கிய கே.எல்.ராகுல் 6 ரன்னில் அதே போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா அதிரடியாக விளையாடினார். நிலைத்து விளையாடிய கோலி 18 ரன்னில் டி கிராண்டோகோம் பந்தில் அவுட் ஆகினார்.

நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி

அடுத்து களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹர்டிக் பாண்டியா 30 ரன்னில் ஜிம்மி நீஷம் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் 4 ரன்னில் அதே ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ரவிந்திர ஜடேஜா நிலைத்து விளையாட தோனி 17 ரன்னில் டிம் சௌவுதி பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த புவனேஷ்வர் குமார் 1 ரன்னில் நீஷம் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் நிலைத்து விளையாடினர். ஜடேஜா அரைசதம் விளாசினார். இந்தியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்கள் அடித்தது.

ஜடேஜா
ஜடேஜா

அதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் கொலின் முன்ரோ மற்றும் மார்டின் கப்தில் இருவரும் களம் இறங்கினர். முன்ரோ 4 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் நிலைத்து விளையாட மார்டின் கப்தில் 22 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் இருவரும் நிலைத்து விளையாடினர்.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்

இருவரும் அரைசதம் விளாசினர். கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ரோஸ் டெய்லர் 71 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் அவுட் ஆகினாலும் நியூசிலாந்து அணி 38வது ஓவரிலேயே வெற்றி இழக்கை எட்டியது. மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்றது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now