உலககோப்பை கிரிக்கெட் தொடர் 2019 இங்கிலாந்தில் இன்னும் இரண்டு நாட்களில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர். இந்த உலககோப்பை தொடர் வழக்கத்திற்கு மாறாக ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்கின்றது. உலககோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 8வது பயிற்சி போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா மற்றும் நூற் அலி ஷத்ரான் இருவரும் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்த தவறினர். ஹஸ்ரதுல்லா 11 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவ வீரர் ரஹ்மத் ஷா 3 ரன்னில் அதே ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார்.
இதை அடுத்து களம் இறங்கிய ஷஹிடி சிறிது நேரம் நிலைத்து விளையாட ஷத்றான் 30 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அடுத்து வந்த அஸ்கர் 10 ரன்னில் ரூட் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ஷஹிடி 19 ரன்னில் ரன்அவுட் ஆகினார்.
இதை அடுத்து களம் இறங்கிய முகமது நபி நிலைத்து விளையாடினாலும் மறுமுனையில் கேப்டன் நைப் 14 ரன்னிலும் நஜிபுல்லாஹ் 1 ரன்னில் அவுட் ஆகினர். அதன் பின்னர் களம் இறங்கிய ரஷித் கான் ரூட் பந்தில் டக்அவுட் ஆக நிலைத்து விளையாடிய முகமது நபி 44 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே அடித்தது.
அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேன்னி பேர்ஸ்ரோ மற்றும் ஜேசன் ராய் இருவரும் களம் இறங்கினர். இந்த ஜோடி தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடியது. ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடிய நிலையில் 22 பந்தில் 39 ரன்கள் அடித்து நபி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ரூட் சிறப்பாக விளையாட மறுமுனையில் பவுண்டரி மழை பொழிந்தார் ராய். அதிரடியாக விளையாடிய ராய் 89 ரன்கள் குவித்தார். ரூட் மறுமுனையில் 29 ரன்கள் அடிக்க இங்கிலாந்து அணி 160 என்ற எளிய இலக்கை 17.3 ஓவரிலேயே எட்டியது. இதன் வெற்றியின் மூலம் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.