ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இன்றைய அதிகாலையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு போய் சென்றது. ஏற்கனவே, பல நாட்டு அணியினரும் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். இந்த பெருமை மிக்க கிரிக்கெட் தொடரில் பேட்ஸ்மேன்களின் கைகள் சற்று ஓங்கி உள்ளன. ஏனெனில், நடந்து முடிந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் சர்வசாதாரணமாக ஒவ்வொரு போட்டியிலும் கிட்டத்தட்ட 300 ரன்கள் குவிக்கப்பட்டன. எனவே, இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்க காத்திருக்கும் மூன்று சிறந்த பேட்ஸ்மேன்களில் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.கிறிஸ் கெயில்:
40 வயதான கிறிஸ் கெயில், இன்றைய காலகட்டத்திலும் உலகின் மிக அபாயகரமான வீரராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட 10 போட்டிகளில் விளையாடி 424 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். இம் மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் 490 ரன்களை குவித்து, இளம் வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் திகழ்ந்து வருகிறார், கிறிஸ் கெயில். எனவே, இவரது அபார ஆட்டத்திறன் இங்கிலாந்து மண்ணிலும் ஈடுபட்டு தொடரின் அதிக ரன்களை குவிக்க ஏதுவாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
#2.டேவிட் வார்னர்:
ஓராண்டுக்கு பின்னர், திரும்பியுள்ள டேவிட் வார்னர் 2019 ஐபிஎல் தொடரில் சிறந்த ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். தொடரின் 12 போட்டிகளில் மட்டுமே விளையாடி 692 ரன்களை குவித்து தொடரின் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், ஆரஞ்சு நிற தொப்பியை தன் வசம் ஆக்கினார். இதனால், நம்பிக்கை அடைந்துள்ள டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி இம்முறை அதிக ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1.விராட் கோலி:
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் விராட் கோலி, இந்திய பேட்டிங் வரிசையில் தூணாக திகழ்ந்து வருகிறார். எந்த ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி ரன்களை குவித்து வருகிறார். இவர் கடந்த ஐம்பது ஒருநாள் போட்டிகளில் 3151 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 11 அரை சதங்களும் 14 சதங்களும் அடங்கும். மேலும், தற்போது இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடமும் வகித்து வருகிறார். எனவே ஐபிஎல் தொடருக்கு பின்னர், கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஓய்வில் இருந்த விராட் கோலி, புத்துணர்ச்சியுடன் தற்போது இங்கிலாந்திற்கு புறப்பட்டுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.