பன்னிரெண்டாவது உலக கோப்பை தொடர் வருகிற மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. பலம் வாய்ந்த பத்து சர்வதேச அணிகள் இந்த உலக கோப்பை தொடரில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ள உள்ளனர். 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பின்பற்றியதை போல் 2019 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இது எப்படி என்றால், ஒரு குழுவில் இணைந்து உள்ள பத்து அணிகளும் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ள வேண்டும். இறுதியில் அதிக வெற்றிகளை குவிக்கும் முதல் நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். சற்று மாறுதலுக்கு உட்பட்ட தொடராக இது அமையும். எனவே, இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படக்கூடிய 3 அறிமுகம் இல்லாத வீரர்களை இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ரேசி வேண் டர் ட்ஸ்ஸன்:
இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகம் கண்டார். அதன் பின்னர், தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்டியில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். குறுகிய சர்வதேச போட்டியில் இவரின் ஆட்டம் சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 353 ரன்களை குவித்துள்ளார். இம்முறை உலக கோப்பை தொடருக்கான அணியில் டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான் இல்லாததும் ஹாஷிம் அம்லாவின் மோசமான ஆட்டம் திறமையும் ரசிகர்களின் மனதை காயப்படுத்தி உள்ளன. இருப்பினும், தமது ஆட்டத்திறனால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க கூடிய வீரராக இவர் அமைவார்.
#2.ஷாய் ஹோப்:
சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவர் வெஸ்ட்இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த ஷாய் ஹோப். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், இதுவரை 53 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அவற்றில் ஆறு சதங்கள் உட்பட 2173 ரன்களை குவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலும் இவரது ஆட்டம் அமர்க்களமாக உள்ளது. இதுவரை இந்த தொடரின் நான்கு போட்டிகளில் விளையாடி 396 ரன்களை குவித்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் இவரது பேட்டிங் சராசரி 50.53 என்ற அளவில் சிறப்பாக உள்ளது.
#1.இமாம் உல் ஹக்:
பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக், தனது குறுகிய கால சர்வதேச வாழ்க்கையில் அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளார். இதுவரை 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர், 1381 ரன்களை குவித்துள்ளார். மேலும், நேற்று முன்தினம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் 151 ரன்களை குவித்தது விருந்தளித்தார். கட்டுக்கோப்பான இவரது பேட்டிங் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற காரணமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.