வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த சில வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் தங்களது பங்களிப்பினை திறம்பட அளித்து வந்துள்ளனர். முதன்முறையாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் நாக்-அவுட் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெற்றது. அதன் பின்னர், தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று சாதனையும் படைத்தது. 2006ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் இறுதிப்போட்டிக்கு வரை முன்னேறியது. மேலும், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்று சாதனையும் படைத்தது. 2018ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை ஆசிய கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது, வங்கதேசம்.
2015ம் ஆண்டு முதல் இந்த அணி விளையாடிய ஒருநாள் போட்டிகளில் வெற்றி சதவீதம் 57 ஆக உள்ளது. ஒட்டு மொத்தத்தில் சமீப காலங்களில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி தோல்வி-சதவீதத்தை விட இது கூடுதலாக உள்ளது. கடந்த வாரத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்கதேச அணி அணி தொடரை வென்று வரலாறு படைத்தது. இதனால், உலக கோப்பை தொடரில் கூடுதல் நம்பிக்கையாக இந்த அணி செயல்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. எனவே, எந்த நேரத்திலும் உலக கோப்பை தொடரில் வங்கதேசம் ஆச்சரியத்தை அளிக்கும் என்பதற்கான மூன்று காரணங்களை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#3.அனுபவம் வாய்ந்த அணி:
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் பலமான அணிகளில் ஒன்று வங்கதேசம். அணியில் இடம்பெற்ற நான்கு வீரர்களான மோர்தசா, தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன் மற்றும் ரஹீம் ஆகியோர் மூன்றுக்கும் மேற்பட்ட உலக கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளனர். 2003 ஆம் ஆண்டு முதல் மோர்தசா நான்கு கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். மற்ற மூவரும் 2007 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். எனவே, இந்த உலக கோப்பை தொடரிலும் வங்கதேச அணிக்கு இவர்களின் அனுபவம் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
#2.பேட்டிங் ஆல்-ரவுண்டர்களின் பங்களிப்பு:
நவீன கால கிரிக்கெட்டில் பேட்டிங் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவும் இங்கிலாந்து மைதானங்கள் அதிக ரன்களை குவித்து சொர்க்கபுரியாக திகழ்கின்றது. சமீபத்தில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் இவர்களது பேட்டிங் திறமைகள் கவனிக்கத்தக்கது. நீண்ட வரிசை பேட்ஸ்மேன்களை கொண்ட வங்கதேச அணி, 2019 உலகக்கோப்பை தொடரில் 300 ரன்களை ஒவ்வொரு போட்டியிலும் கடக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவர்களது ஆடும் லெவனில் 8 பேட்ஸ்மேன்கள் இடம்பெறுவார்கள் என கணிக்கப்படுகிறது.
#1.தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கும் தீராப்பசி:
சமீப காலங்களில் சில அற்புத வெற்றிகளைக் கண்டு முத்திரை பதித்துள்ளனர், வங்கதேசம் அணியினர். ஆசிய கோப்பை, நிதாஸ் டிராஃபி கோப்பை என மூன்று இறுதி ஆட்டங்களில் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் இவர்கள் விளையாடி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. எனவே, இம்முறை நிச்சயம் கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயம் இந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி என்னதான் 3 இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தாலும் அவை அனைத்தும் மிகச்சிறிய வித்தியாசத்தில் தான். எனவே, கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடத்தை பயன்படுத்தி உலக கோப்பை கோப்பை தொடரில் வங்கதேச அணியை முத்திரையை பதிக்க காத்திருக்கின்றது.