உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு பின்னர், ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் திசை திரும்பி உள்ளனர். இந்த பெருமைமிக்க கிரிக்கெட் திருவிழா வருகிற 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் 10 அணிகள் இந்த மெகா தொடரில் களமிறக்க காத்திருக்கின்றனர். சில வீரர்கள் அற்புதமான திறமையை கொண்டு இருந்தாலும் அவர்களது அணியின் ஆடும் லெவனில் இடம்பெறுவது சற்று சந்தேகம் தான். அப்படிப்பட்ட மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.கே.எல்.ராகுல்:
இந்தியாவின் மாற்று தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்றுள்ளார், ராகுல். இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அவற்றில் 343 ரன்களை 34.3 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். கர்நாடகா வீரரான இவர், இந்திய அணியின் நான்காமிடத்தில் பலமுறை களம் இறக்கப்பட்டு சிறப்பாக செயல்படாமல் இருந்துள்ளார். எனவே, ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய பலம் மிகுந்த தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளமையால் இவர் ஆடும் லெவனில் இடம் பெறுவது சற்று சவால் தான்.
#2.உஸ்மான் கவாஜா:
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடைக்கு உள்ளானர்கள் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித். இவர்களின் இடத்தை நிரப்ப தொடக்க ஆட்டக்காரராக கவாஜா ஆஸ்திரேலிய அணியில் களமிறக்கப்பட்டார். அதன் பின்பு, 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 655 ரன்களை குவித்து நம்பிக்கை அளித்து வருகிறார். சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். தற்போது ஓராண்டுக்கு பின்னர் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். எனவே, ஆஸ்திரேலிய அணியில் இவரின் இடம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
#3.டிம் சவுதி:
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான சவுதி, சமீப காலங்களில் ஏமாற்றங்களை அளித்து வருகிறார். சிறந்த இறுதிக்கட்ட வரை வீசும் நியூஸிலாந்து பந்துவீச்சாளரான இவர், தற்போது சொதப்பி வருவதால் நியூசிலாந்து அணியின் ஆடும் லெவனில் இவர் இடம் பெறுவது சந்தேகம் தான். ஐபிஎல் சீசனிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இடம்பெற்று விளையாடி வந்தார். மூன்று போட்டிகளில் களமிறக்கப்பட்ட இவர், ஒரு ஓவருக்கு சராசரியாக 13 ரன்களை அள்ளிக் கொடுத்தார். எனவே, அணியில் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான லாக்கி பெர்குசன் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் உள்ளமையால் இவரின் இடம் ஆடும் லெவனில் தற்போது கவலைக்கிடமாக உள்ளது.