ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு பின்னர், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐசிசி உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இம்முறை இந்த மிகப்பெரிய திருவிழா இங்கிலாந்தில் நடைபெறும். ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் டாப் டென் அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளனர். மேலும், இந்த தொடரில் தங்களது அணிகளுக்காக வெற்றியைத் தரக்கூடிய 3 சிறந்த ஜாம்பவான்களை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#3.எம்.எஸ்.தோனி:
கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து அணிக்கு கோப்பையை வென்று தந்தார், தோனி. மேலும், ஐசிசியின் அங்கீகரிக்கப்பட்ட மூன்று வடிவிலான கிரிக்கெட் கோப்பைகளை வென்ற தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையையும் கொண்டுள்ளார், இவர். இதுவரை 341 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,500 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான இவர், ஆட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவர். 2004ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகம் கண்டார். அதன்பின்னர், 2005 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 148 ரன்கள் குவித்து அணியின் நிரந்தர உறுப்பினர் ஆனார். 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என மூன்று வடிவிலான கோப்பைகளில் வென்று தந்தார். எனவே, இந்த உலக கோப்பை தொடரில் இவரின் பங்கு நிச்சயம் இந்திய அணிக்கு உலக கோப்பையை மூன்றாவது முறையாக வெல்வதற்கு வாய்ப்பளிக்கும்.
#2.கிறிஸ் கெய்ல்:
"யுனிவர்சல் பாஸ்" என்ற அனைவராலும் வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல், பற்றி எந்த ஒரு அறிமுகம் தேவையில்லை. இவர் சந்தேகமின்றி, தனி ஒரு ஆளாக நிலைத்து நின்று அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். 1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை 289 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் 10 ஆயிரத்து 151 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், "தொடர் நாயகன்" விருதையும் வென்றார். அந்த தொடரில் 474 ரன்களையும் 8 விக்கெட்களை கைப்பற்றினார். 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்து உலக கோப்பை தொடரில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். சமீபத்தில், நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 424 ரன்களைக் குவித்து தனது வயது வெறும் நம்பர் மட்டுமே என்று ரசிகர்களுக்கு உணர்த்தினார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனிலும் கூட இவரின் பங்கு போற்றத்தக்கது. எனவே, உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பல வெற்றிகளை குவிக்க இவரும் காரணமாய் அமைவார் என்பதில் மாற்று கருத்தில்லை.
#3.லசித் மலிங்கா:
இலங்கையைச் சேர்ந்த லசித் மலிங்கா, 2004ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். இவரின் குறைந்த வேகப்பந்து தாக்குதல் பல ஆட்டங்களில் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. இதுவரை 218 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 322 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் புரிந்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் தமது இறுதி ஓவரில் மும்பை அணிக்கு நான்காவது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாய் அமைந்தார். எனவே, 2019 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் இவரின் பங்கு நிச்சயம் உதவும்.