ரவிச்சந்திரன் அஸ்வின் எனக்கு அளித்த பௌலிங் நுணுக்கங்களை உலகக் கோப்பையில் செயல்படுத்த போகிறேன் - முஜீப் யுர் ரகுமான்

Ashwin & Mujeeb
Ashwin & Mujeeb

மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் யுர் ரகுமான் ஒரு முண்ணனி வீரராக உள்ளார். இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல்-லில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் முஜீப் யுர் ரகுமான் இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் தொடரில் கிடைத்த சில கிரிக்கெட் நுணுக்கங்களை தான் உலகக் கோப்பை தொடரில் செயல்படுத்த போவதாக முஜீப் யுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

2019 ஐபிஎல் சீசனில் முஜீப் யுர் ரகுமான் பெரும்பாலான போட்டிகளில் காயம் மற்றும் மோசமான ஆட்டத்தால் ஆடும் XI-ல் இடம்பெறவில்லை. தோல் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் இவ்வருட ஐபிஎல் தொடரில் முஜீப் யுர் ரகுமானால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வெளிபடுத்த இயலவில்லை. 2019 ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற இவர் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். 10.05 என்ற மோசமான எகானமி ரேட்டுடன் பந்துவீச்சை மேற்கொண்டார். இது அவர் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மை ஏற்படுத்தியிருந்தாலும், முஜீப் தற்போது தெரிவித்துள்ள கூற்று மீண்டும் அவர் மீது சற்று நம்பிக்கையை வர வைக்க தோன்றுகிறது.

18வயது இளம் வீரர் முஜீப் யுர் ரகுமான் வலை பயிற்சியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சில பௌலிங் அறிவுரைகளை தனக்கு வழங்கியதாக முஜீப் யுர் ரகுமான் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பௌலிங்கை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை ரகுமானிற்கு அஸ்வின் கூறியுள்ளார். இதே நுணுக்கங்களை இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலகக் கோப்பையில் செயல்படுத்துவேன் என ரகுமான் தெரிவித்துள்ளார். அத்துடன் உலகக் கோப்பைக்கு முன் முழு உடற் தகுதியை அடைந்து விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

" கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் அதிக நேரங்களை அஸ்வினுடன் செலவிட்டு பல பௌலிங் நுணுக்கங்களை கற்றுள்ளேன். அஸ்வின் நிறைய பௌலிங் வித்தைகளை என்னிடம் தெரிவித்துள்ளார். இதனை கண்டிப்பாக உலகக் கோப்பையில் செயல்படுத்துவேன். இவ்வருட ஐபிஎல் தொடரில் எனக்கு தோல்பட்டையில் பிரச்சினை இருந்தது. ஆனால் தற்போது நான் உலகக் கோப்பைக்கு முழு உடற்தகுதியுடன் உள்ளேன்".

முஜீப் யுர் ரகுமான் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் வீசிய 4 ஓவரில் 66 ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக டேவிட் வார்னர் இவரது பௌலிங்கை துவம்சம் செய்தார். இருப்பினும் முஜீப் யுர் ரகுமான் துவண்டு விடாமல் தன்னுடைய முழு ஆட்டத்திறனையும் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக வெளிபடுத்துவேன் என தெரிவித்ததுள்ளார். தற்போது அவரது பௌலிங் மோசமாக உள்ளது. இதனை கூடிய விரைவில் கண்டிப்பாக அவர் மாற்ற வேண்டும்.

முஜீப் யுர் ரகுமான் தன் சக நாட்டு சக சுழற்பந்து வீச்சாளர்களான முகமது நபி, ரஷீத் கான் ஆகியோருடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவேன் என முழு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஜீன் 1 அன்று சந்திக்க உள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil