உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் உலக தரம் வாய்ந்த வீரர்களான - ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், யூவேந்திர சஹால், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றிருப்பது நம்பிக்கை அளிக்கும் விதமாக கருதப்படுகின்றது. அணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வீரர்களையும் பாராட்ட வேண்டும். ஏனெனில் , இந்தியாவில் அற்புதமான வேக பந்துவீச்சாளர்கள், உலகக் கிளாசிக் ஸ்பின்னர்கள் மற்றும் விராத் மற்றும் ரோஹித் என அனைவரின் தேர்வும் நன்றாகவே அமைந்துள்ளது.
உலகக் கோப்பையில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பிடித்த அணியாக இந்திய அணி கருதப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உலகக் கோப்பையில் இவர்களுடைய நிறை குறைகளை பற்றி ஆய்வு செய்வோம்.
இந்திய அணியின் பலம்:
முன்னதாக குறிப்பிட்டபடி, அணியின் மிகப்பெரிய வலிமை அணியில் இருக்கும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் எண்ணிக்கை. எந்த சூழ்நிலையிலும் பொறுமையாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தரக்கூடிய பல்வேறு வீரர்கள் இடம்பெற்றிருப்பது மற்ற அணிகளுக்கு சவாலாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்தியாவின் பலவீனம்:
இந்தியாவின் பலவீனம் என்று வெளிப்படையாக உரைப்பதற்கு எந்த ஒரு காரணங்களும் இல்லாத போதிலும், பொதுவாகவே இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது ஒவ்வொரு வீரர்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய வரிசை வீரர்கள் இந்திய அணியில் இல்லை என்பது ஒருபுறமிருக்க, பொதுவாகவே இந்திய அணி 350 -ரன்களுக்கு மேல் ரன்களை குவிப்பதில் பெரிதும் தடுமாறி வருகின்றது. மேலும் , கடைசி சில ஓவர்களில் தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டுமே களம் இறங்கி அணிக்காக அதிரடியாக விளையாடி அதிக ரன்களை குவித்து வருகின்றனர்.
இந்தியாவின் துருப்புச் சீட்டு:
இந்தியாவில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற பல்வேறு உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றிருந்த போதிலும் இந்த அணிக்காக பெரிதும் துருப்புச்சீட்டாக விளையாடும் வீரர்கள் பவுலர்களே. எதிரணியின் அதிரடி தாக்குதலை நடுத்தர ஓவர்களில் முடிந்தவரை சமாளித்து 350-ரன்களுக்கு கீழ் குறைப்பதில் பெரும் பங்களிப்பு ஸ்பின் பவுலர்களான யுவேந்திர சாகல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவர் கையிலேயே உள்ளது.
அணியில் இடம்பெற்றிருப்போர்:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், எம்.எஸ். தோனி, விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், குல்டிப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், யூவேந்தர சாகல்.
எதிர்பார்ப்புகள்:
குறைந்தபட்சம் இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அதற்கு அப்பால் செல்ல முடியுமா? அது பின்வரும் போட்டிகளில் அவர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பினை பொறுத்தெ அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.