2019 உலகக் கோப்பைக்கான 3 காத்திருப்பு வீரர்களை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்

Rishap pant & Ambati Rayudu
Rishap pant & Ambati Rayudu

நடந்தது என்ன?

2019 உலகக்கோப்பைக்கான 3 காத்திருப்பு வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று(ஏப்ரல் 17) அறிவித்துள்ளது.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேன் அம்பாத்தி ராயுடு முதல் இரண்டு காத்திருப்பு வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது காத்திருப்பு வீரராக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.

உங்களுக்கு தெரியுமா

பல்வேறு விவாதங்களுக்கு பிறகு எம்.எஸ்.கே பிரசாந்த் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு அடுத்தமாத இறுதியில் இங்கிலாந்திற்கு பயணம் செய்யவிருக்கும் 15 பேர் கொண்ட இந்திய உலகக் கோப்பை அணியை ஏப்ரல் 15 அன்று அறிவித்துள்ளது.

எதிர்பாரத விதமாக உலகக் கோப்பை அணியிலிருந்து ரிஷப் பண்ட் மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகியோரின் விலக்கு பற்று பல்வேறு விவாதங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இவ்வருட தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடரில் வீரர்களின் ஆட்டத்திறனை வைத்தே உலகக் கோப்பை தேர்வு இருக்கும் என இந்திய தேர்வுக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கதைக்கரு

ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் உலகக் கோப்பை விலக்கு பற்றி கிரிக்கெட் வள்ளுநர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தேர்வுக்குழுவை கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்வுக்குழுவின் இந்த முடிவை பற்றி அம்பாத்தி ராயுடு டிவிட்டரில் நகைத்துள்ளார்.

இருப்பினும் இன்று (ஏப்ரல் 17) 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் உள்ள வீரர்களுக்கு காயம் ஏற்பட்டாள் அவர்களுக்கு மாற்று வீரர்களாக ரிஷப் பண்ட் மற்றும் ராயுடு ஆகியோரை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த இரு வீரர்களும் 2019 உலகக் கோப்பை காத்திருப்பு வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் இவர்களுடன் இனைந்துள்ளார். நவ்தீப் சைனி சமீபத்தில் உள்ளுர் கிரிக்கெட்டில் அதிரடி பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார்.

ஐசிசி சேம்பியன் டிராபி போலவே உலகக் கோப்பை தொடருக்கும் மூன்று வீரர்களை காத்திருப்பு வீரர்களாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் அம்பாத்தி ராயுடு முதல் இரண்டு காத்திருப்பு வீரர்களாக உள்ளனர். நவ்தீப் சைனி பௌலிங்கில் காத்திருப்பு வீரராக உள்ளார். இந்திய உலககோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுள் எவரேனும் காயம் காரணமாக விலகினால் தேவைக்கேற்ப ராயுடு, பண்ட், நவ்தீப் சைனி ஆகிய வீரர்களுள் ஏதேனும் ஒரு வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இன்று தனியார் பத்திரிகை ஒன்றில் கூறியுள்ளார்.

கலீல் அகமது, அவிஸ் கான், தீபக் சகார் ஆகியோர் இந்த காத்திருப்பு பட்டியலில் தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை. பௌலர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் இவர்களுக்கு வாய்ப்பு உண்டு. பேட்டிங்கை பொறுத்த வரை ரிஷப் பண்ட் மற்றும் அம்பாத்தி ராயுடு காத்திருப்பு வீரர்களாக பிசிசிஐ உறுதிபட தெரிவித்துள்ளது.

அடுத்தது என்ன?

அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிஸியாக உள்ளனர். உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள சில முண்ணனி கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரின் இறுதிகட்டத்தில் பங்கேற்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் எவ்வித இடற்பாடும் இன்றி மிகுந்த உற்சாகத்துடன் தன் தாய் நாட்டிற்காக உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பதால் முன்னணி வீரர்கள் இந்த முடிவை எடுப்பார்கள். .

Quick Links

Edited by Fambeat Tamil