இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பல பரீட்சையில் ஈடுபட உள்ளனர். இதற்கு முன்னர், 6 உலக கோப்பை போட்டியில் சந்தித்துள்ள இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை கண்டுள்ளன. பலமிக்க இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் மோதவிருக்கின்றன.
#1.இங்கிலாந்து அணி:
2019 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல இங்கிலாந்து அணி சிறப்பாக தயாராக உள்ளது. சமீபத்தில் முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை 4-0 என்ற கணக்கில் வென்ற இங்கிலாந்து அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்டு அதிர்ச்சி அளித்தது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் டி20 வடிவத்தில் விளையாடி தாம் யார் என்று நிரூபித்தது, இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் ஆகியோர் எவ்வகையான பந்து வீச்சையும் சிதறடித்து தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், அணியில் உள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் மற்றும் மொயின் அலி ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பந்துவீச்சு தரப்பிலும் புதிய வருகையான சோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட், டாம் கரன், அடில் ரஷி,த் மொயின் அலி ஆகியோர் எதிரணியின் பேட்டிங்கை சீர்குலைக்கும் நோக்கில் பந்து வீசுவர்.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, அடில் ரஷித், சோப்ரா ஆச்சர் மற்றும் லியாம் பிளங்கெட்.
#2.தென்னாபிரிக்கா அணி:
தனது முதலாவது உலகக் கோப்பையை இம்முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தென்ஆப்பிரிக்க அணி விளையாட உள்ளது. இறுதியாக விளையாடிய 10 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது, தென்ஆப்பிரிக்க அணி. இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு கூடுதல் உற்சாகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது.
அணியின் கேப்டன் டு பிளிசிஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களோடு ஹசிம் அம்லாவும் இரு பயிற்சி ஆட்டங்களில் முறையே 65 மற்றும் 51* ரன்கள் குவித்துள்ளார். டேவிட் மில்லர் மற்றும் டூமினி ஆகியோரின் ஆட்டம் ஒன்றிணைந்தால் மிகப்பெரிய ஒரு இலக்கை தென் ஆப்பிரிக்க அணி எட்டலாம். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளரான இம்ரான் தாஹீர், உலக கோப்பை தொடரிலும் தனது ஆதிக்கத்தை தொடர உள்ளார். இப்போட்டியில் டேல் ஸ்டெயின் விளையாட மாட்டார் என ஏற்கனவே அணியின் பயிற்சியாளர் அறிவித்திருந்தார். ரபாடா மற்றும் லுங்கி ஆகியோர் தங்களது பொறுப்பை உணர்ந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
ஹாஷிம் அம்லா, டி காக், டு பிளிசிஸ், வண்டெர் டஸ்ஸன், டேவிட் மில்லர், டுமினி, ஃபெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபாடா, லுங்கி இங்கடி மற்றும் இம்ரான் தாஹிர்.