எதிர்வரும் 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நம்பர்-4 இடத்திற்கு தோனி ஒரு சிறந்த ஆயத்த வீரர் என முன்னாள் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாசாரி ஶ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேனாக களமிறங்கிய அம்பாத்தி ராயுடுவை இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்திய அணியினர் தடுமாறி வரும் இந்த இடத்தில் விஜய் சங்கர் அல்லது கே.எல்.ராகுல் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் எம்.எஸ் தோனி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகிறார். இந்திய அணியின் நம்பர்-4 இடத்திற்கு தோனி ஒரு சிறந்த வீரராக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
தோனி ஒரு சிறந்த அனுபவ ஆட்டக்காரர் மற்றும் இந்திய அணியின் கடந்த கால வெற்றிகளில் ஒரு முன்னணி வீரராக அவர் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தோனி 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பங்கேற்று 8 போட்டிகளில் விளையாடி 119 என்ற அற்புதமான சராசரியுடன் 358 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் இவரது ஸ்ட்ரைக் ரேட் 142.53 ஆக தற்போது உள்ளது. தோனியின் தற்போதைய சிறந்த ஆட்டத்திறன் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. எனவே தோனியை நம்பர் 4ல் இறக்கினால் இந்திய அணிக்கு சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
"டைம்ஸ் ஆஃப் இந்தியா" என்ற பத்திரிக்கையிடம் கிருஷ்ணமாசாரி ஶ்ரீகாந்த் கூறியதாவது:
இந்திய அணியில் நம்பர் 4 இடம் நீண்ட நாளக விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு வந்தது. நம்பர்-4 இடத்திற்கு தேடல் தேவை இல்லை என நான் தற்போது நினைக்கிறேன். காரணம் இந்திய அணியில் நம்பர்-4 இடத்திற்கு ஏற்கனவே ஆயத்த வீரராக தோனி உள்ளார். என்னை பொறுத்தவரை தோனியே இந்த இடத்திற்கு சரியான வீரர். முன்னாள் கேப்டன் தோனியை தவிர வேறு யாரும் இந்த இடத்திற்கு சரியான வீரராக இருப்பார்கள் என எனக்கு தோன்றவில்லை. தொடர்ந்து சீரான ஆட்டத்தை தோனி வெளிபடுத்தியும் ஏன் இவரை நம்பர் 4 இடத்தில் களமிறக்க இந்திய அணி தயங்குகிறது என எனக்கு தெரியவில்லை. ஆஸ்திரேலிய தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் தோனியின் பேட்டிங்கை வைத்து பார்க்கும் போது அவர் தற்போது வரை நல்ல ஆட்டத்திறனுடன் தான் உள்ளார் என்பது நமக்கு தெரிகிறது. உலகக் கோப்பையில் தோனி மிடில் ஆர்டரில் சிறப்பான வீரராக இருப்பார்.
முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஓடிஐ கிரிக்கெட்டில் தோனியின் பேட்டிங்கை அற்புதமாக புரிந்து வைத்துள்ளார். இவர் அதிரடியை வெளிபடுத்த சில மணி துளிகள் எடுத்துக் கொண்டாலும் சிறப்பான பேட்டிங்கை கடந்த கால கிரிக்கெட்டில் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2019 உலகக் கோப்பையிலும் தோனியின் இந்த சிறப்பான ஆட்டத்திறன் தொடர்ந்தால் இந்திய அணியின் பேட்டிங்கில் ஒரு முண்ணனி வீரராக தோனி இருப்பார்.
தோனியை பற்றி மேலும் சில விஷயங்கள் ஶ்ரீகாந்த் தெரிவித்தார்.
" தோனி தற்போது ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் தோனி சற்று நிலைத்து நிற்க சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறார். தோனி சரியாக நிலைத்து நின்று விட்டால் பந்துவீச்சாளர்கள் இவருக்கு பந்துவீச அஞ்சுவர். ஆரம்பத்தில் நிலைத்து நின்று பின் அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்துவது தோனியின் ஒரு தனித்திறனாகும். குறிப்பாக சேஸிங்கில் தோனியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கும். இவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆட்டத்திற்கு ஏற்றவாறே தோனி இவ்வாறு கையாளுகிறார் என்றே இதனை நாம் கூற வேண்டும். கடந்து 6 ஆண்டுகளாக தோனியின் பங்களிப்பு இந்தியாவிற்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. தான் களமிறங்கியது முதல் இறுதி ஓவர் வரை போட்டியை சிறப்பாக எடுத்து செல்ல வேண்டும் என தோனி தன்னை நம்புகிறார்.