2019 உலகக் கோப்பை தொடரில் எம்.எஸ்.தோனி 5வது பேட்டிங் வரிசையில் களம் காண வேண்டும் என விரும்புகிறேன் - சச்சின் டெண்டுல்கர்

Sachin Tendulkar
Sachin Tendulkar

மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி லண்டன் சென்றுள்ளது. நன்கு திறமையான இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாட சென்றுள்ளது. கடந்த சில வருடங்களாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தடுமாறி வந்ததது. இதற்கு கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது அனுபவ கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடரில் 5வது பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் லெஜன்ட் சச்சின் டெண்டுல்கர் விரும்பியுள்ளார்.

இந்தியா கடந்த இரு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை உலக கிரிக்கெட்டில் வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் உலகின் நம்பர் 2 ஓடிஐ அணியாக இந்தியா திகழ்கிறது. இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியுள்ளது. இருப்பினும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தனது சொந்த மண்ணிலேயே இந்திய அணி தொடரை இழந்ததால் இந்திய அணியின் கட்டமைப்பு பற்றி அதிக கேள்வி எழுந்துள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து விளையாட தவறுவதால் அணி நிர்வாகம் மிடில் ஆர்டரில் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் எம்.எஸ்.தோனி நம்பர்-5 இடத்தில் பேட் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை கூறியுள்ளார். ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், மூன்றாவது பேட்ஸ்மேனாக விராட் கோலியும், 5வது பேட்ஸ்மேனாக எம்.எஸ்.தோனியும் உலகக் கோப்பை தொடரில் களமிறங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அதிகம் விவாதிக்கப்படும் நம்பர்-4 பற்றி சச்சின் டெண்டுல்கர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ESPN கிரிக்இன்போவிற்கு சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது,

என்னுடைய தனி ஒப்பிட்டின்படி தோனி 5வது பேட்ஸ்மேனாக உலகக் கோப்பையில் களமிறங்க வேண்டும். அணியின் திட்டம் பற்றி எனக்கு தற்போது வரை எதுவும் தெரியாது. என்னுடைய ஒப்பிட்டின்படி ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், நம்பர்-3ல் விராட் கோலியும் களமிறங்க வேண்டும். நம்பர்-4ல் யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம் மற்றும் நம்பர்-5ல் எம்.எஸ்.தோனி களமிறங்க வேண்டும்.

மேலும் ஹர்திக் பாண்டியா டெத் ஓவரை கையாள சிறப்பான பேட்ஸ்மேன் என குறிப்பிட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதே ஆட்டத்திறனை இனிவரும் காலங்களிலும் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் 2019 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள 4 அணிகளையும் தேர்வு செய்துள்ளார். அதில் இந்திய அணியுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணியை தேர்வு செய்துள்ளார். 4வது அணியாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி இடம்பெறும் என கூறியுள்ளார்.

"இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 4வது அணியாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி இடம்பெற வாய்ப்புள்ளது.

என தனது பேட்டியை டெண்டுல்கர் முடித்தார்.

Quick Links

App download animated image Get the free App now