உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானின் 5 மோசமான பேட்டிங்

WI vs Pak
WI vs Pak

பாகிஸ்தான் அணி 2019 உலகக் கோப்பை தொடரை சிறப்பானதாக தொடங்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியிலேயே 105 ரன்களுக்கு சுருண்டது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜேஸன் ஹோல்டர் பௌலிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் பெரும்பாலும் ஷார்ட் பாலில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆடுகள தன்மையை சரியாக பயன்படுத்திக் கொண்டு விளையாடினர். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் கணித்து விளையாட தவறினர். ஓஸானே தாமஸ் தனது சிறப்பான வேகத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் பாகிஸ்தான் மொத்தமாக 105 ரன்களே குவித்தது‌ உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது குறைவான ரன்கள் இதுவாகும். நாம் இங்கு பாகிஸ்தான் தனது உலகக்கோப்பை வரலாற்றில் அடித்த 5 குறைவான ரன்களை பற்றி காண்போம்.

#5 134 vs இங்கிலாந்து, கேப்டவுன், 2003 உலகக் கோப்பை

2003 உலகக் கோப்பை தொடரின் 23வது போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 134 ரன்களில் சுரண்டது. ஸ்விங் மாஸ்டர் ஜேம்ஸ் ஆன்டர்சன் இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பௌலர்களான கிராய்க் வைட் 3 விக்கெட்டுகளையும், ஆன்ரிவ் ஃபிளிட்ஆஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 246 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 112 என்ற மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

#4 132 vs அயர்லாந்து, கிங்ஸ்டன், 2007 உலகக் கோப்பை

2003 உலகக் கோப்பை தொடரில் 17வது போட்டியில் அயர்லாந்திற்கு எதிரான போட்டியிலும் ஆச்சரியமூட்டும் வகையில் பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. கிங்ஸ்டனில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது. அயர்லாந்து அணி சார்பாக பாய்ட் ரன்கின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆன்ரிவ் போதா மற்றும் கைல் மெக்கல்லன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அயர்லாந்து அணி இந்த இலங்கை அடைந்து டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் தற்போதைய கேப்டன் இயான் மோர்கன் இந்த போட்டியில் அயர்லாந்து அணி சார்பாக பங்கேற்று விளையாடினார். இந்த போட்டியில் இவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

#3 132 vs ஆஸ்திரேலியா, லார்ட்ஸ், 1999 உலகக் கோப்பை

கிரிக்கெட் அடையாளமாக திகழும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 1999 உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா மோதிய இறுதிப் போட்டியில் 132 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டு வெளியேறியது. இதனால் இந்த இறுதிப் போட்டி ஒரு பக்க சாதகமாக உலகக் கோப்பை வரலாற்றில் அமைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய லெஜன்ட்ரி சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே 4 விக்கெட்டுகளையும், க்ளின் மெக்ராத் மற்றும் டாம் தலா 2 விக்கெட்டுகளையும் இந்த போட்டியில் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மிகவும் சுலபமாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#2 105 vs மேற்கிந்தியத் தீவுகள், டிரென்ட் பிரிட்ஜ், 2019 உலகக் கோப்பை

பாகிஸ்தான் அணி 2019 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 105 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஷார்ட் பாலில் சிறப்பாக சோதனை செய்யப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகளின் பவுண்ஸர் பந்து வீச்சிற்கு பாகிஸ்தான் அணியால் நிலைத்து விளையாட இயலவில்லை. மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஓஸானே தாமஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேற்கிந்தியத் தீவுகளின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ஆல் ரவுண்டர் ஆன்ரிவ் ரஸல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

#1 74 vs இங்கிலாந்து, அடிலெய்டு, 1992 உலகக் கோப்பை

1992 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மிகக் குறைந்த ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த போட்டியில் 74 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் வெளியேறியது. இங்கிலாந்து சார்பில் சர் இயான் போதாம், ஜீ ஸ்மால், டி ஃபிரெடிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிரிங்கில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் இந்தப் போட்டி மழையினால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி அட்டவனையில் முதலிடத்தை பிடித்தது. அத்துடன் 1992 உலகக் கோப்பையை இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

Quick Links