உலகக் தொடர் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒரு சிறப்பான கிரிக்கெட் தொடராகும். இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்தும். தற்போது உள்ள சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது பங்கேற்கும் 10 அணிகளுமே வலிமையான அணிகள் தான். விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லா உலகக் கோப்பை தொடரை காண உலகில் பல்வேறு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை தொடரைப் போன்று அல்லாமல் இவ்வருட உலகக் கோப்பை தொடர் சற்று மாறுபட்டுள்ளது. 1992ல் நடந்த உலகக் கோப்பை தொடர் போல் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தகுதிச் சுற்றில் ஒவ்வொரு முறை மோதி கொள்ள வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
மே 30 அன்று தொடங்க உலகக் கோப்பையின் முதல் தகுதிச் சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. ஜீலை 14 அன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் புதிய உலக சேம்பியன் யார் என்பது நமக்கு தெரியவரும்.
2019 ஐசிசி உலகக் கோப்பையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை:
2015 முதல் 2023 வரை நடைபெறவுள்ள அனைத்து ஐசிசி தொடர்களையும் ஒளிபரப்பும் உரிமை "ஸ்டார் ஸ்போர்ட்ஸ்" ற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அளித்துள்ளது. இந்த நெட்வொர்க் நேரடி ஒளிபரப்பு மற்றும் ஹை லைட்ஸ் போன்றவைகளை ஒளிபரப்பு செய்யும்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸின் துணை நெட்வொர்கான ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸிற்கு உலகக் கோப்பை தொடரை மிகப்பெரிய மற்றும் சிறிய தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ரசிகர்கள் ஸ்மார்ட் போனில் "ஹாட் ஸ்டார்" மூலமாகவும் உலகக் கோப்பை தொடரை கண்டு களிக்கலாம்.
ஸ்டார் நெட்வொர்க் இந்திய நிறுவனமாக இருந்தாலும், ஆசிய கண்டத்தில் உள்ள வங்க தேசம், பூடான், மால்தீவ்ஸ், நேபால், இலங்கை மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் உலகக் கோப்பை தொடரை ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.
உலகக் கோப்பை தொடர் ஒளிபரப்ப படும் தொலைக்காட்சி சேனல்கள்:
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உலகக் கோப்பை தொடரை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி சேனலின் பெயரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ், சேனல் 9 - ஆஸ்திரேலியா
இஎஸ்பின்(ESPN) - ஆன்டிகுவா & பார்புடா, பார்படாஸ், பெர்முடா, டோமினிக்கா, கிரினிடா, கயானா, ஜமைக்கா, ஸ்டே கிட்ஸ் & நிவிஸ், ஸ்டே லூசியா, ஸ்டே வின்சென்ட் & தி கிரினிடயன்ஸ், டிரினிடாட் & டொபாக்கோ.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் - ஹாங்காங்
ஃபாக்ஸ் சர்வதேச சேனல் - மலேஷியா
ஓஎஸ்ஏ(OSA) - மத்திய கிழக்கு & வடக்கு ஆப்பிரிக்கா( அல்ஜெரியா, எகிப்து, லிபியா, மாரிதான்யா, மொராக்கோ, சூடான், துனிஷியா மற்றும் ஃபேக்ரெய்ன், ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டன், குவைத், லெபானான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு அமீரகம், மேற்கு பேங்க் மற்றும் காஜா, வெஸ்டர்ன் சஹாரா, ஏமன்.
ஸ்கை ஸ்போர்ட்ஸ்- நியூசிலாந்து
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஹப், சிங்டெல் - சிங்கப்பூர்
சூப்பர் ஸ்போர்ட் - துனை ஆப்பிரிக்க சஹார மற்றும் தென்னாப்பிரிக்கா (அங்கோலா, பெனின், போட்ஸ்வானோ, புர்கினா பாசோ, பூரன்டி, கேமரூன், கேப் வர்டி, மத்திய குடியரசு ஆப்பிரிக்கா, சாந்த், கேமரோஸ் ஐஸ்லேன்ட், காங்கோ, டெமோகிராடிக் குடியரசு காங்கோ, டிஜீபோட்டி, இக்வோட்ரில் காய்னா, எரிட்ரியா, எத்தியோப்பியா, கேபோன், கேமிபியா, கானா, கைனே பிஸோ, கைனே, ஈவோரி கோஸ்ட், கென்யா, லிசோத்தோ, லிப்ரியா, மடகாஸ்கர், மாலவி, மாலி, மாருதன்யா, மயோட்டி, மொஜாம்பிக், நமிபியா, நைஜர், நைஜீரியா, ரீ யுனியன், ஆர்வன்டா, ஸ்டே ஹாலனா, ஷா தோம் மற்றும் பிரிஸ்பி, செனிகல், சே செல்லாஸ், சிரா லியோனி, சோமாலியா, ஸ்வாஜீ லேன்ட், தான்ஜீயா, தோகோ, உகாந்தா, ஜமிபியா, ஜெய்ரி, ஜீம்பாப்வே)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD3 - இந்தியா ( வங்கதேசம், நேபால், மால்தீவ்ஸ், பூடான், இலங்கை)
தூர்தர்ஷன் - இந்தியா(நேபால், இலங்கை, வங்கதேசம், பூடான், மால்தீவ்ஸ்)
பி டிவி & டென் ஸ்போர்ட்ஸ் - பாகிஸ்தான்
ஜீ டிவி - வங்கதேசம்
எஸ்எல்ஆர்ஸி(SLRC) - இலங்கை
ஸ்கை ஸ்போர்ட்ஸ் - இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து, குடியரசு அயர்லாந்து
வில்லோ ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா, ப்யோர்டோ ரிக்கோ, க்வாம், நார்தெர்ன் மரியான ஐஸ்லாந்து, யு.எஸ். வெர்ஜீன் ஐஸ்லாந்து, அமெரிக்கன் சேமோ
ஹாட் ஸ்டார் - இந்தியா & அமெரிக்கா (மொபைல் மென் பொருள் மற்றும் வலைதளம்)
மேற்கண்ட தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் உலகின் மிகப்பெரிய தொடரான உலகக் கோப்பையை பார்க்க முடியும். 1.5 பில்லியனுக்கு அதிகமானோர் உலகக் கோப்பை தொடரை காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.