சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய திருவிழாவாக உள்ளது, உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா. இம்முறை இந்த மிகப்பெரிய தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், நடத்தப்படும் இந்த பெருமை மிக்க தொடரில் உலகின் தலைசிறந்த 10 அணிகள் விளையாட இருக்கின்றன. பெரும்பாலான போட்டிகளில் தொடரை வென்று சாம்பியன் பட்டதை தனதாக்கிய அணிகளின் வீரர்களே தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர். ஆனால், இதற்கு அப்பாற்பட்டு கோப்பை வெல்லாத அணிகளின் சில வீரர்கள் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்கள். இதனைப் பற்றி இந்த தொகுப்பில் சற்று ஆழமாக காண்போம்.
#3.மார்டின் குரோவ்:
1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது பேட்டிங் திறமையால் அனைவராலும் பாராட்டப்பட்டவர், மார்ட்டின் குரோவ். இவர் அந்த தொடரில் 456 ரன்களை குவித்து தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனால், அவருக்கு அந்த தொடரில் "தொடர் நாயகன்" விருது அளிக்கப்பட்டது. உலக கோப்பை தொடர்களில் பட்டம் பெறாத அணிகளின் வீரர்கள் தொடர் நாயகன் விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும். வாசிம் அக்ரம், ஜாவித் போன்ற வீரர்களும் தொடர் நாயகன் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் மாட்டின் பெயரே இறுதியானது.
#2.லான்ஸ் குளூஸ்னர்:
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், லான்ஸ் குளூஸ்னர். அந்த ஏழாவது உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்றது. தொடரின் அரையிறுதி போட்டி வரை முன்னேறிய தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு லான்ஸ் குளூஸ்னரின் பங்களிப்பும் போற்றத்தக்கது. தொடரில் 241 ரன்களையும் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தனது ஆல்-ரவுண்ட் திறமையை நிரூபித்தமையால் தொடர்நாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
#1.சச்சின் டெண்டுல்கர்:
2003ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் "மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கர் தொடரின் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. அந்த தொடரில் குறிப்பிடும் வகையில், 673 ரன்களை குவித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார், சச்சின் டெண்டுல்கர். இதனால் அவர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். சச்சின் டெண்டுல்கரின் ஒரே தொடர் நாயகன் விருதும் இது தான்.