பிரிஸ்டோல் கவுன்டி மைதானத்தில் 2019 உலக கோப்பை தொடரின் போட்டிகள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்க உள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியும், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியும் என மொத்தம் மூன்று போட்டிகள் இம்மைதானத்தில் நடைபெற உள்ளன. இதுவரை இந்த மைதானத்தில் 17 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில், உலக கோப்பை தொடரின் மூன்று போட்டிகள் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் இந்திய அணிக்கு 100 சதவீத வெற்றி வாய்ப்பு பதிவாகியுள்ளது. கவுன்டி மைதானத்தில் இந்திய அணி விளையாடி உள்ள மூன்று போட்டிகளிலும் வென்று சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்திய அணிக்கு இங்கு ஒரு போட்டி கூட ஒதுக்கபடவில்லை. எனவே, கவுண்டி மைதானத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் படைக்கப்பட்ட சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
369 / 9 - இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்களைக் குவித்தது இம்மைதானத்தில் பதிவான அதிகபட்ச ஸ்கோராகும்.
92 - 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோர் ஆக பதிவாகியுள்ளது.
352 - சச்சின் டெண்டுல்கர் இந்த மைதானத்தில் 352 ரன்களை குவித்து பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.
140* - கென்யா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 140 வரை ஆட்டமிழக்காமல் குவித்தார். இதுவே ஒரு போட்டியில் தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
6 - இம்மைதானத்தில் இதுவரை 6 சதங்கள் பதிவாகியுள்ளன.
2 - இந்த மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் இரு சதங்களை அடித்துள்ளார்.
பவுலிங் சாதனைகள்:
10 - இங்கிலாந்தின் ஆண்டிரூவ் ஃப்லின்ட்டாஃப் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
5 / 25 - நியூசிலாந்து அணியின் ரிச்சர்ட் ஹேட்லி மைதானத்தில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு சாதனையாக உள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
4 - கிறிஸ் ரீடு, ஜோஸ் பட்லர் மற்றும் மேட் பிரையர் ஆகியோர் தலா 4 வீரர்களை ஆட்டமிழக்க செய்துள்ளனர்.
4 - இங்கிலாந்து அணியின் கிறிஸ் ரீடு தமது விக்கெட் கீப்பிங் பணியால் நான்கு வீரர்களை ஒரே போட்டியில் ஆட்டமிழக்கச் செய்தது ஒரு போட்டியில் மிகச் சிறந்த சாதனையாகும்.
ஃபீல்டிங் சாதனைகள் :
5 - இங்கிலாந்து அணியின் பால் கொலிங்வூட் 5 கேட்சுகளை பிடித்தது சிறந்த ஃபீல்டிங் சாதனையாகும்.