2019 உலக கோப்பை தொடரின் மூன்று போட்டிகள் டவுண்டனில் அமைந்துள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியும், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியும் நடைபெற உள்ளன. இதுவரை இந்த மைதானத்தில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அந்த 3 ஒருநாள் போட்டிகளுமே உலக கோப்பை தொடர்களில் நடைபெற்ற போட்டிகளாகும். எனவே, மைதானத்தில் குவிக்கப்பட்ட பல சாதனைகளை இந்த தொகுப்பில் காணலாம்.
பேட்டிங் சாதனைகள்:
373 / 6 - 1999ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை இந்த மைதானத்தில் குவித்ததே அதிகபட்ச ரன்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
216 - அதே போட்டியில் இலங்கை அணி 216 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
183 - இந்தியாவின் சவுரவ் கங்குலி இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆவார்.
183 - 1999ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சவுரவ் கங்குலி 183 ரன்களை குவித்தார். இது ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
3 - இம்மைதானத்தில் இதுவரை மூன்று சதங்கள் பதிவாகி உள்ளன. அவற்றில் கங்குலி மற்றும் திராவிட் ஆகியோரால் படைக்கப்பட்ட இரு சதங்கள் ஆகும்.
பவுலிங் சாதனைகள்:
5 - இந்தியாவின் ராபின் சிங் மற்றும் இங்கிலாந்தின் மார்க்ஸ் ஆகியோர் தலா 5 விக்கெட்களை மைதானத்தில் கைப்பற்றியுள்ளனர்.
5 / 31 - இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ராபின் சிங் 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார். இது சிறந்த பந்துவீச்சு சாதனையாகும்.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
1 - ஆல்விஸ், ஆன்டி பிளவர் மற்றும் இயான் கோல்டு ஆகியோர் தலா ஒரு வீரரை தமது விக்கெட் கீப்பிங் பணிகளால் ஆட்டமிழக்கச் செய்து உள்ளனர்.
ஃபீல்டிங் சாதனைகள்:
2 - இங்கிலாந்து அணியின் ஆலன் லம்ப் இரு கேட்சுகளை பிடித்தது சிறந்த ஃபீல்டிங் சாதனையாகும்.