2019 உலக கோப்பை தொடரின் போட்டிகள் பர்மிங்காமில் உள்ள எட்க்பஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியும், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டியும் , வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டியும் மற்றும் இரண்டாவது அரையிறுதி போட்டியும் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளன. இதுவரை 59 ஒருநாள் போட்டிகள் இம்மைதானத்தில் அரங்கேறியுள்ளன. அவற்றில், 11 உலக கோப்பை போட்டிகளும் அடக்கமாகும். மேலும், இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட பல சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
408 / 9 - 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்களை குவித்தது அதிகபட்ச ரன்களாக இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
70 - ஆஸ்திரேலிய அணி 70 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது குறைந்தபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது.
343 - இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 143 ரன்களை குவித்து இந்த மைதானத்தில் அதிக ரன்களை குவித்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.
171 - நியூசிலாந்து அணியின் கிளன் டர்னர் 171 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தது ஒரு போட்டியில் குவித்த தனி நபர் அதிகபட்ச ரன்களாகும்.
19 - இதுவரை இந்த மைதானத்தில் 19 சதங்கள் பதிவாகியுள்ளன.
2 - கிரகாம் கூச் இந்த மைதானத்தில் 2 சதங்களை பதிவு செய்துள்ளார். மேலும், ரோஹித் சர்மா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் தலா ஒரு சதத்தை இந்த மைதானத்தில் அடித்துள்ளனர்.
பவுலிங் சாதனைகள்:
21 - இங்கிலாந்து அணியின் டேரன் காக் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறார்.
6 / 52 - ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 52 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு சாதனையாக இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
11 - ஆஸ்திரேலிய அணியின் ராடு மார்ஸ் 11 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து முன்னிலை வகிக்கிறார்.
5 - இங்கிலாந்து அணியின் ஜோன்ஸ் ஒரே போட்டியில் 5 பேட்ஸ்மேன்களை ஆட்டம் இழக்கச் செய்து சாதனை படைத்துள்ளார்.
ஃபீல்டிங் சாதனைகள்:
6 - இங்கிலாந்து அணியின் மார்க்கஸ் ஆறு கேட்ச்களை பிடித்து முதலிடத்தில் உள்ளார்.
4 - ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் கிளைன் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா நான்கு கேட்ச்களை இரு வெவ்வேறு போட்டிகளில் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.