ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள் புள்ளிவிவரங்கள்: ஹெடிங்க்லே

தோனி ஒரே இன்னிங்ஸில் அதிக டிஸ்மிஸ் செய்த வீரர்.
தோனி ஒரே இன்னிங்ஸில் அதிக டிஸ்மிஸ் செய்த வீரர்.

2019-ஆம் ஆண்டு ஐ.சி.சி. உலகக்கோப்பை போட்டியில் ஹெடிங்க்லே, லீட்ஸ் மைதானத்தில் நான்கு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா vs இலங்கை ஆகிய அணிகள் நடைபெறும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதுவரை லீட்ஸ் மைதானத்தில் 43 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 12 உலகக் கோப்பை போட்டிகள். (12 போட்டிகளில் ஒரு போட்டி மட்டும் முடிவு தெரியாமல் போனது). 1975-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இரண்டு லீக் போட்டிகளும், ஒரு அரையிறுதிப் போட்டியும் நடைபெற்றது. 1979-ஆம் ஆண்டு மூன்று லீக் போட்டிகளும், 1983-ஆம் ஆண்டு மூன்று லீக் போட்டிகளும், ஒரு லீக் போட்டியும், இரண்டு சூப்பர் சிக்ஸ் போட்டிகளும் 1999-ஆம் ஆண்டு நடைபெற்றது.

ஹெடிங்க்லே மைதானத்தில் மொத்தம் 9 ஒருநாள் போட்டிகளில் இந்தியா அணி விளையாடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

அந்த மைதானத்தில் நடைபெற்ற அனைத்து சர்வதேச ஒருநாள் போட்டிகளின் முக்கிய புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.

பேட்டிங்:

2017-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 339/6 ரன்கள் எடுத்தது ஒரு அணி அதிகபட்சமாக எடுத்த மொத்த ரன்கள்.

1975-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன்கள்.

இங்கிலாந்து வீரர் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் மொத்தம் 408 ரன்கள் இந்த மைதானத்தில் எடுத்துள்ளார். ஒரு வீரர் இந்த மைதானத்தில் அடித்த அதிகபட்ச ரன்கள்.

2006-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா 152 ரன்கள் எடுத்தது, ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த வீரர் ஆவார்.

இதுவரை இந்த மைதானத்தில் 16 சதங்கள் அடித்துள்ளது.

ஜோ ரூட் (இங்கிலாந்து), மார்கஸ் ட்ரெஸ்கோதிக் (இங்கிலாந்து) மற்றும் சனத் ஜெயசூரியா (இலங்கை) ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். இன்றுவரை எந்த இந்திய வீரரும் இந்த மைதானத்தில் ஒரு சதம் கூட அடித்ததில்லை.

இங்கிலாந்து அணியின் மோர்கன் இதுவரை 3 அரை சதங்களை அடித்துள்ளார். இந்த மைதானத்தில் அதிக அரை சதங்களை அடித்த வீரர் மோர்கன் தான்.

பந்துவீச்சு:

இங்கிலாந்து அணியின் கிறிஸ் ஓல்ட் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த மைதானத்தில் அதிகபட்ச விக்கெட் எடுத்த வீரர்.

2001-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான பாகிஸ்தான் அணி வீரர் வக்கார் யூனிஸ் 7 விக்கெட்கள் எடுத்து 36 ரன்கள் கொடுத்தது இந்த மைதானத்தில் சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது.

இந்த மைதானத்தில் 6 முறை ஐந்து விக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பிங்:

ஆஸ்திரேலியா வீரர் ராட் மார்ஷ் 13 டிஸ்மிஸ் செய்தது விக்கெட் கீப்பர் செய்த அதிகபட்ச டிஸ்மிஸ்ஸல் ஆகும்.

2007-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான இந்திய அணியின் எம்.எஸ். தோனி ஒரே இன்னிங்ஸில் 6 டிஸ்மிஸ் செய்துள்ளார். இந்த மைதானத்தில் ஒரு விக்கெட் கீப்பர் ஒரு இன்னிங்ஸில் செய்த அதிக டிஸ்மிஸ்ஸல் ஆகும்.

பீல்டிங்:

அதிகபட்சமாக ஆசிப் இக்பால் (பாகிஸ்தான்), இயன் போத்தம் (இங்கிலாந்து), லியாம் பிளன்கெட் (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் (இங்கிலாந்து), டேவிட் கோவர் (இங்கிலாந்து) ஆகியோர் தலா 4 கேட்ச்கள் பிடித்துள்ளனர்.

1973-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் டோனி க்ரேக் மற்றும் 1974-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா அணியின் பிஷான் சிங் பேடி ஆகியோர் அதிகபட்சமாக 3 கேட்சுகள் ஒரே இன்னிங்ஸில் பிடித்துள்ளனர்.

எழுத்து- நீலஞ்சன் சென்

மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்

Quick Links