2019 உலக கோப்பை தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி ஓல்டு டரஃப்ரோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இம்மைதானத்தில் ஒரே ஒரு உலகக்கோப்பை போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. 2019 உலகக் கோப்பை தொடரின் 4 லீக் போட்டிகளும் முதலாவது அரையிறுதி போட்டியும் இந்த மைதானத்தில் அரங்கேற உள்ளன. இதுவரை 47 ஒருநாள் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்று உள்ளன. அவற்றில், 11 உலக கோப்பை போட்டியிலும் அடக்கமாகும். எனவே, இதுவரை மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் படைக்கப்பட்ட பல்வேறு சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
318 / 7 - 2006ஆம் ஆண்டு இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது அதிகபட்ச ஸ்கோராக மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
45 - இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கனடா 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
405 - கிரகாம் கூச் இந்த மைதானத்தில் மொத்தம் 405 ரன்களை குவித்துள்ளார்.
189* - வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் இம்மைதானத்தில் 189 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தது ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
12 - இந்த மைதானத்தில் இதுவரை 12 சதங்கள் பதிவாகியுள்ளன.
5 - கிரகாம் கூச் இம்மைதானத்தில் 5 அரைச்சதங்களை குவித்து முன்னிலை வகிக்கிறார்.
பந்துவீச்சு சாதனைகள்:
15 - இங்கிலாந்து அணியின் பாப் வில்ஸ் 15 விக்கெட்களை கைப்பற்றி இந்த மைதானத்தில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
5 / 14 - ஆஸ்திரேலிய அணியின் மெக்ராத் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாக இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
13 - இங்கிலாந்து அணியின் அலெக் ஸ்டெவார்ட் தமது விக்கெட் கீப்பிங்கால் 13 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
6 -2000ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டெவார்ட் 6 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.
ஃபீல்டிங் சாதனைகள்:
5 - இங்கிலாந்து அணியில் இயான் போத்தம் ஐந்து கேட்சுகளை இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் பிடித்துள்ளார்.
3 - கிளைவ் லாய்ட், நெய்ல் பிரதர் மற்றும் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஆகியோர் தலா 3 கேட்சுகளை இந்த மைதானத்தில் நடைபெற்ற வெவ்வேறு போட்டிகளில் பிடித்துள்ளனர். இவை சிறந்த பீல்டிங் சாதனைகளாகும்.