ஜூன் மாதம் ஐந்தாம் தேதி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத வருகின்றன. இந்த போட்டி தான் இந்தியாவுக்கு 2019 உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டி ஆகும். இந்த போட்டியை தவிர்த்து, மேலும் 4 போட்டிகள் ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளன, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டியும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டியும், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டியும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதும் போட்டியும் நடைபெற உள்ளன. இதுவரை இந்த மைதானத்தில் 23 ஒருநாள் போட்டிகள் நடந்து உள்ளன. அவற்றில் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றியையும் இரு தோல்விகளையும் சந்தித்து உள்ளது. எனவே, இந்த மைதானத்தில் படைக்கப்பட்ட சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
373 / 3 - பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை குவித்ததே இம்மைதானத்தில் பதிவான அதிகபட்ச ஸ்கோராகும்.
65 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்க அணி 65 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
610 - இங்கிலாந்து அணியின் இயான் மோர்கன் மைதானத்தில் 610 ரன்களை குவித்துள்ளார். இது தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
189* - நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் மைதானத்தில் 189 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்தது ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்சமாகும்.
18 - இந்த மைதானத்தில் இதுவரை 18 சதங்கள் பதிவாகியுள்ளன.
2 - இயான் மோர்கன் மற்றும் இயன் பெல் ஆகியோர் தலா 2 சதங்களை மைதானத்தில் பதிவு செய்துள்ளனர்.
பவுலிங் சாதனைகள்:
12 - கிரீம் ஸ்வான் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 12 விக்கெட்களை மைதானத்தில் கைப்பற்றியுள்ளனர்.
5 / 29 - வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் தில்லன் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு சாதனையாக உள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
13 - ஜோஸ் பட்லர் மைதானத்தில் 13 வீரர்களை தமது விக்கெட் கீப்பிங் பணியால் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
5 - ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 5 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தது ஒரு போட்டியில் படைக்கப்பட்ட சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையாகும்.
பீல்டிங் சாதனைகள்:
5 - பென் ஸ்டோக்ஸ் மற்றும் இயான் மோர்கன் ஆகியோர் தலா 5 கேட்ச்களை பிடித்து உள்ளனர்.
3 - டேரன் சேமி மற்றும் இயான் பெல் ஆகியோர் தலா மூன்று கேட்சுகளை ஒரே போட்டியில் பிடித்துள்ளனர்.