2019 உலகக் கோப்பை தொடரின் 4 போட்டிகள் இங்கிலாந்தின் கார்டிஃபில் அமைந்துள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளன. நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியும், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியும், இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதும் போட்டியும், ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியும் இம்மைதானத்தில் நடைபெற உள்ளன. இதுவரை இந்த மைதானத்தில் 24 போட்டிகள் அரங்கேறி உள்ளன. அவற்றில் ஒரே ஒரு போட்டி மட்டுமே உலக கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டி ஆகும். எனவே, இம்மைதானத்தில் படைக்கப்பட்ட பல்வேறு சாதனைகளை இந்த தொகுப்பு விளக்குகின்றது. .
பேட்டிங் சாதனைகள்:
342 / 8 - 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது இம்மைதானத்தில் பதிவாகிய அதிகபட்ச ஸ்கோராகும்.
138 - 2013ஆம் ஆண்டு இலங்கை அணி 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோராகும்.
307 - இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் இந்த மைதானத்தில் மொத்தம் 307 ரன்கள் குவித்துள்ளார்.
131 - ஆஸ்திரேலிய அணியின் ஷான் மார்ஷ் இம்மைதானத்தில் 131 ரன்கள் குவித்ததே ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
8 - இதுவரை 8 சதங்கள் பதிவாகியுள்ளன
4 - இம்மைதானத்தில் ஜோஸ் பட்லர் 4 அரைச்சதங்களை கடந்தது தனிநபர் அதிகபட்ச அரை சதங்களாகும்.
பவுலிங் சாதனைகள்:
11 - இங்கிலாந்து அணியின் லியாம் பிளங்கெட் இம்மைதானத்தின் 11 விக்கெட்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளார்.
4 / 28 - இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை அள்ளியது சிறந்த பந்துவீச்சாக மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
11 - இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் இந்த மைதானத்தில் தமது விக்கெட் கீப்பிங் பணியால் 11 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
3 - ஆடம் கில்கிரிஸ்ட், ஹோப் கின்ஸ், கிரைக் வெஸ்டர், ஜோஸ் பட்லர், சர்ப்ராஸ் அகமது ஆகியோர் தலா மூன்று வீரர்களை இம்மைதானத்தில் நடைபெற்ற ஒரே போட்டியில் ஆட்டமிழக்க செய்துள்ளனர்.
பீல்டிங் சாதனைகள்:
5 - இந்தியாவின் சுரேஷ் ரெய்னா இம்மைதானத்தில் மொத்தம் ஐந்து கேட்ச்களை பிடித்து முன்னிலை வகிக்கிறார்.
4 - நியூஸிலாந்து வீரர் நாதன் மெக்கலம் இம்மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நான்கு கேட்ச்களை பிடித்ததே ஒரு போட்டியின் சிறந்த ஃபீல்டிங் சாதனையாகும்.