2019 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 30 ஆம் தேதி லண்டனில் அமைந்துள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியை தவிர்த்து, மேலும் நான்கு போட்டிகளில் இம்மைதானத்தில் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வங்கதேச போட்டியும், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலிய போட்டிகளும் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளன. இதுவரை இம்மைதானத்தில் 69 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன .10 உலக கோப்பை போட்டிகள் இந்த மைதானத்தில் அரங்கேறியுள்ளன. அவற்றில் ஒரு போட்டி கைவிடப்பட்டது. எனவே, இம்மைதானத்தில் நடைபெற்ற உள்ள ஒருநாள் போட்டிகளில் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:
398 / 5 - 2015இல் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 398 ரன்கள் குவித்ததே இம்மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
103 - தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோராகும்.
573 - இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் மைதானத்தில் 573 ரன்களை குவித்தது தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
176 - வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் 176 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்ததே ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
36 - இம்மைதானத்தில் இதுவரை 36 சதங்கள் பதிவாகியுள்ளன.
3 - இங்கிலாந்து அணியின் மார்கஸ் இந்த மைதானத்தில் அதிகபட்சமாக மூன்று சதங்களை அடித்துள்ளார்.
5 - இம்மைதானத்தில் இயான் மோர்கன் ஐந்து அரைசதங்கள் குவித்ததே தனிநபர் அதிகபட்ச அரைசதங்கள் ஆகும்.
பௌலிங் சாதனைகள்:
30 - இங்கிலாந்து அணியின் வேகப் புயல் ஜேம்ஸ் ஆண்டர்சன் மைதானத்தில் 30 விக்கெட்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறார்.
6 / 42 - பாகிஸ்தான் வீரர் உமர் குல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளியது சிறந்த பந்துவீச்சாக இம்மைதானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
15 -இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் இதுவரை 15 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது ஒட்டுமொத்த அதிகபட்ச சாதனை ஆகும்.
6 - 2013ஆம் ஆண்டு ஜோஸ் பட்லர் தமது விக்கெட் கீப்பிங்கால் 6 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்ததே தனிநபர் அதிகபட்ச விக்கெட் கீப்பிங் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபீல்டிங் சாதனைகள்:
6 - இங்கிலாந்தின் ஜோ ரூட் மைதானத்தில் 6 கேட்ச்களை பிடித்துள்ளார்.
4 - 2000ஆம் ஆ ஜிம்பாப்வே அணியின் கேய் விட்டல் நான்கு கேட்சுகளை பிடித்தது ஒரு போட்டியில் தனிநபர் அதிகபட்ச கேட்சுகளாகும்.