2019 உலகக்கோப்பை தொடரில் நாட்டிங்காமில் அமைந்துள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன. பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டியும், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டியும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியும், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியும் மைதானத்தில் நடைபெற உள்ளன. 2019 உலகக்கோப்பை தொடரில் இம்மைதானத்தில் நடைபெறும் முதலாவது போட்டி வரும் 31ஆம் தேதி துவங்க உள்ளது. இதுவரை 44 ஒருநாள் போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில், 11 போட்டிகள் உலக கோப்பை தொடரில் அரங்கேறியுள்ளன. எனவே, மைதானத்தில் பதிவான பல்வேறு சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
பேட்டிங் சாதனைகள்:

481 / 6 - 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் பதிவாகிய அதிகபட்ச ஸ்கோராகும்.
83 - இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
462 - இங்கிலாந்து அணியின் இயான் மோர்கன் இம்மைதானத்தில்மொத்தம் 462 ரன்களை குவித்துள்ளார்.
171 - இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 171 ரன்களை குவித்தது ஒரு போட்டியில் குவித்த தனிநபர் அதிகபட்ச ரன்களாகும்.
20 - மைதானத்தில் இதுவரை 20 சதங்கள் பதிவாகியுள்ளன.
2 - அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஆலன் ஆகியோர் தலா இரு சதங்களை இம்மைதானத்தில் குவித்துள்ளனர்.
3 - இயான் மோர்கன், ஜோஸ் பட்லர் மற்றும் இயான் பெல் ஆகியோர் தலா மூன்று அரைச்சதங்களை மைதானத்தில் குவித்துள்ளனர்.
பவுலிங் சாதனைகள்:
16 - ஜேம்ஸ் ஆண்டர்சன் மைதானத்தில் 16 விக்கெட்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறார்.
6 / 25 - கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு சாதனையாகும்.
விக்கெட் கீப்பிங் சாதனைகள்:
10 - ஜோஸ் பட்லர் தமது விக்கெட் கீப்பிங் பணியால் மொத்தம் 10 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
6 - இங்கிலாந்து அணியின் மேத் பிரையர் ஆறு வீரர்களை ஒரே போட்டியில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
ஃபீல்டிங் சாதனைகள்:
5 - கிறிஸ் வோக்ஸ். அடில் ரஷித் மற்றும் இயான் மோர்கன் ஆகியோர் தலா 5 கேட்சுகளை மைதானத்தில் பிடித்துள்ளனர்.
3 -ரிக்கி கிளார்க் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 கேட்சுகளை ஒரே போட்டியில் பிடித்துள்ளனர்.