உலககோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கிரிக்கெட் அணிகள் தங்களின் இறுதியான உலககோப்பை அணியை அறிவித்து வருகின்றனர். 12வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஒரு முறை கூட உலககோப்பையை வெல்லாத இங்கிலாந்து அணி இந்த முறை சொந்த மண்ணில் உலக கோப்பை தொடரை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது. இந்த நிலையில் எற்கனவே இங்கிலாந்து அணி அறிவித்த அணியில் மூன்று மாற்றங்களை செய்துள்ளது.
இங்கிலாந்து அணியில் எல்லா உலககோப்பை தொடரிலும் வலுவான அணியுடன் களம் கண்டாலும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாதது அந்த அணிக்கு மிகவும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த முறை இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தற்போதைய இங்கிலாந்து அணி கடைசியாக நடைபெற்ற 11 தொடர்களிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவித்த உலககோப்பை அணியில் இருந்து அலேக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி மற்றும் ஜோ டேன்லி ஆகிய மூவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அலேக்ஸ் ஹேல்ஸ் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டேவிட் வில்லி கடைசியாக நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்கள் மட்டுமே கைபற்றி உள்ளார். அதே நேரத்தில் ரன்களையும் அதிகமாக வழக்கியதால் அவருக்கு பதில் இளம் வேகபந்து வீச்சளார் ஜோப்ஃரா ஆர்ச்சர் அணியில் இணைந்துள்ளார்.
ஜோ டேன்லி அணியில் அதிக வாய்ப்புகள் வழங்கிய போதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்ததால் அவருக்கு பதில் லியான் டவுசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சுழல் பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டரும் கூட என்பதால் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேபோல் அலேக்ஸ் ஹேல்ஸ் பதிலாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய வின்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் உலககோப்பை அணி விவரம் : (கேப்டன்) இயான் மோர்கன், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், ஜேன்னி பேர்ஸ்ரோ, ஜேசன் ராய், மோயின் அலி, பென் ஸ்டோக்ஸ், வின்ஸ், டாம் க்ர்ரன், லியான் டவுசன், லியான் ப்ளாங்கேட், மார்க் வுட், கிரிஸ் வோக்ஸ், ஜோப்ஃரா ஆர்ச்சர், அடில் ரஷித்.
இங்கிலாந்து அணியின் உலககோப்பை தொடரை இயான் மோர்கன் தலைமையில் களம் இறங்குகிறது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் பட்லர், ஸ்டோக்ஸ் போன்ற அனுபவ வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் அனைத்து டி-20 தொடர்களிலும் அசத்தி வந்த ஜோப்ஃரா ஆர்ச்சர் அணியில் இடம் பெற்றது இங்கிலாந்து அணிக்கு மிகவும் சதகமான முடிவாக கருதப்படுகிறது. அதே போல் டாம் கர்ரன், கிரிஸ் வோக்ஸ், மோயின் அலி, போன்ற சிறந்த ஆல்-ரவுண்டர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணி உலககோப்பை தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்க்கொள்கிறது.