ஐபிஎல் போட்டி சிறப்பாக நடந்து முடிந்த பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஜுலை 14 ஆம் தேதி முடிகிறது. இந்த 12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெற உள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள கிரிக்கெட் அணிகள், அங்கு பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது நடந்துக்கொண்டு இருக்கும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது குறித்து ஜாம்பவான் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். இந்த தோல்வி காரணமாக பல விமர்சனகளை எதிர்கொண்டது இந்திய அணி. நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தற்போது கேப்டனான விராட் கோலியிடம் இந்த மூன்று காரணகளால் உலகக் கோப்பை தோற்க வாய்ப்பு உண்டு என்று சில தவறுகளை சுட்டி காட்டியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் கோலியிடம் மூன்று காரணங்களை கூறியுள்ளார் அதாவது ஆஸ்திரேலியா,இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் இந்திய அணி விளையாடும் போது சிறிய சிறிய தவறுகளையும் கூட செய்வது நம் அணிக்கு மிகப் பெரிய பாதிப்பாக அமையும். அணியின் தவறுகள் என்று பார்க்கும் போது, 1.நடுவரிசையில் விளையாடும் வீரர்கள் 2.ஆல் ரவுண்டர்கள் 3.பும்ராவை சிறந்த நேரத்தில் பயன்படுத்துவதாகும் என்று மூன்று காரணங்களை கூறியுள்ளார் சச்சின்.
1.நடு வரிசை வீரர்கள்
இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் நடு வரிசையில் விளையாடும் வீரர்கள் தங்கள் கடமையை சிறப்பாக செய்தால் மட்டுமே முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறுகிறார்.
- விஜய் சங்கர்
- கேதர் ஜாதவ்
- கே.எல் ராகுல்
- எம்.எஸ் தோனி
- தினேஷ் கார்த்தி
இவர்கள் அனைவரும் இந்த உலகக் கோப்பையில் தங்கள் கடைமையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கோலியிடம் சச்சின் கூறினார். இவர்கள் அனைவரையும் விராட் கோலி சரியான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். தோனியை பொருத்தவரை எந்த ஆர்டரில் இறங்கினாலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை விளையாடி அணிக்கு பலம் சேர்ப்பார். ஆனால் மீதம் உள்ள வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார் சச்சின்.
2.ஆல் ரவுண்டர்கள்
அதைப்போல் ஆல் ரவுண்டர்கள் என்று பார்க்கும் போது
- கேதர் ஜாதவ்
- ரவிந்தர ஜடேஜா
- ஹர்த்திக் பாண்டியா
- விஜய் சங்கர்
விராட் கோலி ஆல் ரவுண்டர்களை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார் சச்சின்.பொதுவாக இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் ஆனால் அனைத்து சூழ் நிலைகளிலும் வேகப்பந்து வீச்சாளர் கைக்கொடுப்பார்க்ள் என்று நம்பமுடியாது. அதனால் விராட் கோலி சுழல் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றார் சச்சின்.
3.சிறந்த சமயத்தில் பும்ராவை பயன்படுத்துதல்
உலகின் சிறந்த இறுதி ஓவர் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆவார். அவரை போன்ற ஒருவர் அணிக்கு கட்டாயம் வேண்டும். பும்ரா பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் சரியான நிலையில் பந்துவீசி அணிக்கு வெற்றியை தேடி தருபவர். பும்ரா சிறந்த வேக பந்து வீச்சாளர் என்பதால் இவரின் பந்துகளை பேட்ஸ்மன்களால் கணிக்க முடியாது.எனவே பும்ராவை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோலியிடம் சச்சின் கூறியுள்ளார்.