ஐபிஎல் தொடரில் சாதிக்க அனைத்து தகுதிகள் இருந்தும் சாதிக்க முடியாமல் தவிக்கும் அணி என்றால் அது பெங்களூர் அணிதான். இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணியாக திகழ்கிறது RCB அணி. அதற்கு காரணம் அந்த அணியின் நட்சத்திர நாயகன் ரன் குவிக்கும் இயந்திரம் விராட் கோஹ்லி. இவரை தவிர்த்து உலகம் முழுக்க ரசிகர்களை ஈர்க்கும் எ.பி. டிவில்லியர்ஸ் அந்த அணிக்காக ஒரு தொடரை கூட விடாமல் பங்கேற்று வருகிறார். இவர் தற்போது தான் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் என்பது கூடுதல் செய்தி.
இந்த முறை ஏலத்தில் பங்குபெற்ற RCB அணியின் நிர்வாகம் தங்களது பந்துவீச்சை சரி செய்ய எண்ணி வீரர்களை தேர்ந்தெடுத்தது எனலாம். காரணம் பேட்டிங்கில் பட்டையை கிளப்பும் RCB அணி பந்துவீச்சில் சோடைபோவது வாடிக்கையான ஒன்று. ஆனாலும் கையில் பணத்தட்டுப்பாடு இருந்ததாலும், வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அதிகம் இருந்ததாலும் சரியான பந்துவீச்சாளர்களை இந்தமுறையும் எடுக்க தவறியது RCB அணி.
அதில் குறிப்பிடும்பட்சத்தில் ஸ்டோய்னிஸ், கோல்டெர் நைல் மற்றும் சிவம் துபே ஆகியோரை வாங்கியது சிறப்பு எனலாம்.
அணி விபரங்கள்:
பேட்ஸ்மேன்கள்:
விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், சிம்ரான் ஹெட்மைர், டி.படிக்கல், ஹிம்மத் சிங்.
விக்கெட் கீப்பர்கள்:
ஹென்றிச் க்ளாஸன், பார்திவ் பட்டேல்.
ஆல்ரவுண்டர்கள்:
அக்ஸதீப் நாத், பவான் நேகி, வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, மொயின் அலி, ஸ்டோய்னிஸ், கிராண்ட்ஹோம், பி.பர்மன், மிலிண்ட் குமார், குர்கீரத் சிங்.
பௌலர்கள்:
சஹால், கூல்டர் நைல், சிராஜ், டிம் சவுதி, உமேஷ் யாதவ், நவதீப் சைனி, கெஜ்ரொலியா.
அணியின் கலவை:
RCB அணியை பொறுத்தவரை கடினமான விஷயம் என்றால் அது சரியான கலவையில் அணியை தேர்ந்தெடுப்பது தான். அதற்கு சான்றாக கோஹ்லி RCB அணிக்காக பலமுறை தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். டீவில்லியர்ஸ் மற்றும் கெய்ல் அணியில் இருந்த பொழுது கூடுதல் வெளிநாட்டு வீரர்களை எடுக்கமுடியாமல் திணறியது, அதே போன்று தான் இந்த முறையும் நிகழ வாய்ப்புள்ளது. மேலும் கோஹ்லியை தவிர அனுபவம் வாய்ந்த சிறந்த இந்திய வீரர் என்று சொல்லிக்கொள்ளும்படி ஒருவர்கூட இல்லை.
[எ.கா] CSK - ரெய்னா, ராயுடு, கேதார் ஜாதவ், ஜடேஜா. MI - ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, பும்ராஹ் மற்றும் யுவராஜ் சிங். இதன் காரணமாகவே இந்த இரு அணிகளும் ஐபிஎல்லில் பலமுறை சாதிக்க முடிந்தது.
தொடக்க வீரர்கள்:[1,2]
பார்திவ் பட்டேல், மொயீன் அலி/ ஸ்டாய்னிஸ்.
பலம்: ஸ்டாய்னிஸ் மட்டுமே பலமாக காட்சி தருகிறார். பிபிஎல் தொடரில் தொடக்க வீரராக இறங்கி அதிரடியில் அசத்தியுள்ளார்.
பலவீனம்: அதிரடி தொடக்கம் தரும் RCB அணிக்கு, இந்தமுறை சரியான தொடக்கம் அமைவது கேள்விக்குறி தான். பார்திவ் பட்டேல் நேர்த்தியான ஆட்டக்காரர் என்றால் கூட, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. மொயீன் அலி எவ்வாறு சாதிப்பார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். காரணம் ஸ்டாய்னிஸ் தாயகம் திரும்ப நேரிட்டால் இவர் தான் களமிறங்கவேண்டும்.
மேலும் தொடக்க வீரர்களுக்கு மாற்றாக தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே உள்ளார்.
தொடக்க வீரர்கள் மதிப்பெண்: 6/10