ஐபிஎல் 2019: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பற்றிய ஒரு அலசல் 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

மிடில் வரிசை வீரர்கள்:[3,4,5]

விராட் கோஹ்லி, டீவில்லியர்ஸ் மற்றும் சிம்ரான் ஹெட்மைர்.

டீவில்லியர்ஸ் மற்றும் கோஹ்லி
டீவில்லியர்ஸ் மற்றும் கோஹ்லி

பலம்: RCB அணியின் கோப்பை கனவு இவர்கள் மூவர் கையில் மட்டுமே உள்ளது. இவர்கள் சோபிக்க தவறினால் அனைத்தும் வீண், ஆனால் அதற்க்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான். கோஹ்லி எந்த சூழலிலும் ரன்கள் குவிப்பார், டீவில்லியர்ஸ் எந்த திசையிலும் ரன்கள் குவிப்பார் இவர்களுடன், ஹெட்மைர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரம். அணியின் மூன்றில் இரண்டு பங்கு ரன்களை இவர்கள் மூவரும் மட்டுமே குவிக்க அதிக வாய்ப்புள்ளது.

ஹெட்மைர்- [U-19 அணிக்காக உலக கோப்பை வென்று தந்தவர். மேலும் இந்தியாவில் தற்போது நடந்த தொடரில் அதிரடியாக சதம் அடித்துள்ளார்].

பலவீனம்: குறிப்பிடும் பட்சத்தில் எதுவும் இல்லை.

மிடில் வரிசை வீரர்கள் மதிப்பெண்: 9.5/10

பினிஷெர்கள்:[6,7,8]

மொயீன் அலி/ஸ்டாய்னிஸ், கிராண்ட்ஹோம்/சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர்/பவான் நேகி.

காலின் டி கிராண்ட்ஹோம்
காலின் டி கிராண்ட்ஹோம்

பலம்: கிராண்ட்ஹோம், ஸ்டாய்னிஸ் மற்றும் மொயீன் அலி சிறந்த அனுபவம் வாய்ந்த டி-20 வீரர்கள். இவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிடிலும் சரியான முறையில் ஆட்டத்தை முடிக்க வல்லவர்கள்.

பலவீனம்: பெரும்பாலும் இவர்களில் யாரையாவது இருவரை தான் அணியில் இணைக்க முடியும். ஒருவர் சரியாக ஆடாத பட்சத்தில் வீரர்களை அடிக்கடி மாற்றவேண்டிய சூழல் ஏற்படலாம். சுந்தர் மற்றும் நேகியின் அனுபவம் மிக குறைவு. பெரிய ரன்களை சேஸ் செய்யும்பொழுது தடுமாறுவது நிச்சயம்.

மிடில் வரிசை வீரர்கள் மதிப்பெண்: 7/10

Quick Links