பௌலர்கள்:[9,10,11]
சஹால், உமேஷ் யாதவ், சிராஜ்/நவதீப் சைனி.
பலம்: பவர்பிளே ஓவேர்கள் வீசுவதில் சிறந்த வீரர்கள் எனலாம். சஹால் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளதால் அணிக்கு கைகொடுப்பார் எனலாம். மேலும் சுந்தர் பவர்-பிளே ஓவர்களில் பந்துவீசுவதில் திறமை வாய்ந்தவர்.
[ வெளிநாட்டு வீரர்கள் சரியாக அளவில் எடுக்கும் பட்சத்தில் டிம் சௌதி மற்றும் கூல்டர் நைல் இவர்களில் ஒருவர் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் இவர்கள் பேட்டிங்கிலும் கைகொடுப்பது கூடுதல் சிறப்பு ].
பலவீனம்: டெத் ஓவேர்கள் வீசுவதில் பலவீனம் எனலாம். உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் இந்தியா அணிக்காக பங்கேற்ற போட்டிகளிலேயே இதை காண முடிந்தது. எனவே RCB பெரிய சிக்கல் இங்கு தான் உள்ளது. இதை எப்படி கையாள போகிறது என்று பொருத்திருந்தான் பார்க்கவேண்டும்.
பௌலர்கள் மதிப்பெண்: 7/10
இந்தமுறை வாய்ப்பு எப்படி?
மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களை ஆராயும் பொழுது இந்த முறை கோப்பை வெல்வது என்பது கடினமான ஒன்று தான் சொல்ல வேண்டும். பெரிய வீரர்களான ஸ்டாய்னிஸ் மற்றும் கூல்டர் நைல் தேசிய அணிக்காக விளையாட செல்வதால், அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படும்.
மேலும் முழுமையான வெற்றி என்பது கோஹ்லி, டீவில்லியர்ஸ் மற்றும் ஹெட்மைர் [மூவர்கள்] கையில் மட்டுமே உள்ளது. 2007-ம் ஆண்டு யாருக்கும் அறிமுகமில்லாத ராஜஸ்தான் அணி எப்படி கோப்பை வென்றதோ, அதே போல சுந்தர், துபே மற்றும் பௌலர்கள் எழுச்சி பெரும் பட்சத்தில் அனைத்து அணிகளுக்கும் RCB அணி மூவர்கள் துணையுடன் சவால் விடுக்கலாம்.