உலகக் கோப்பையில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள் பகுதி-1

மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ்
மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ்

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த உலக கோப்பை தொடரில் போட்டியை மாற்றும் அளவிற்கு முக்கிய பங்களிக்கும் நபர்களாக இருப்பவர்கள் ஆல் ரவுண்டர்கள் தான். ஒவ்வொரு அணியிலும் ஆல் ரவுண்டர்களின் பங்களிப்பு குறித்த தொகுப்பை காணலாம்.

இங்கிலாந்து

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பையில் ஜொலிப்பார் என எதிர் பார்க்கப் படுகிறார். ஏனென்றால் இங்கிலாந்து அணிக்காக சொந்த மண்ணில் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலுமே சிறப்பாக விளையாடக் கூடியவர். அண்மைக் காலமாக இவரின் பீல்டிங்கும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மொயின் அலியின் சுழற் பந்து வீச்சு இங்கிலாந்து மண்ணில் நன்றாகவே திரும்புகிறது. அத்துடன் பேட்டிங்கிலும் அனுபவ வீரர் போன்று விளையாடிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருமே இங்கிலாந்து அணிக்கு பலமே.

தென் ஆப்பிரிக்கா

கிறிஸ் மோரிஸ் 
கிறிஸ் மோரிஸ்

தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர்களில் கிறிஸ் மோரிஸ் முக்கியமானவர். பவுலிங்கில் அனுபவம் உள்ள இவர் முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்டவராக உள்ளார். அத்துடன் பேட்டிங்கில் சிறிது நேரம் விளையாடினாலும் அதிரடியை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவராக இவர் திகழ்கிறார். மற்றொருவர் ஆண்டில் பெஹல்குவே அணிக்கு தேவைப்படும் போது பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே கலக்குவார்.

வெஸ்ட் இண்டீஸ்

ரஸல், ஜேசன் ஹோல்டர் மற்றும் பிராத்வேட்
ரஸல், ஜேசன் ஹோல்டர் மற்றும் பிராத்வேட்

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரஸல் ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடியை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் 50 ஓவர்கள் கொண்ட சர்வதேச போட்டிகளில் இந்த அதிரடி எடுபடாது ஆனாலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி முகம் காணலாம். 20 ஓவர் போட்டிகளில் எடுபடாத இவரது பந்துவீச்சு 50 ஓவர் போட்டிகளில் நன்றாகவே எடுபடும். ரசலை விட வெஸ்ட் இண்டீஸ் அணியில் முக்கியமான ஆளாக திகழ்பவர்கள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்றும் பிராத்வேட். தற்போது உள்ள சர்வதேச ஆல்ரவுண்டர்களில் டாப் 10 பட்டியலில் உள்ளவர்கள் இவர்கள். ஐபிஎல் போட்டியில் பிரகாசிக்கவில்லை என்றாலும் உலக கோப்பையில் பேட்டிங் பௌலிங் என இரண்டிலுமே பிராகாசிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

இலங்கை

மேத்யூஸ் மற்றும் திஷாரா பேரெரா 
மேத்யூஸ் மற்றும் திஷாரா பேரெரா

இலங்கை அணியின் அனுபவ வீரர்களாக உள்ள மேத்யூஸ் மற்றும் திஷாரா பேரெரா இருவரும் திறம்பட விளையாடும் ஆற்றல் கொண்டவர்கள். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே நன்றாக விளையாடக் கூடியவர்கள். இலங்கை அணி தொடர் தோல்விகளால் முடங்கியுள்ளதால், அந்த அணியில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பங்களாதேஷ்

ஷகிப் அல் ஹசன் மற்றும் மஹமதுல்லா
ஷகிப் அல் ஹசன் மற்றும் மஹமதுல்லா

சர்வதேச ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் வங்காள தேசத்தின் ஷகிப் அல் ஹசன். இவரது பவுலிங்கில் சற்று கவனம் தவறினாலும் விக்கெட்டு தான். அந்த அளவிற்கு பவுலின் மூலம் எதிரணியை மிரட்டும் திறன் கொண்டவராக வலம் வருகிறார்.அதிரடியாக விளையாடவும் தேவைப்பட்டால் நிதானமாக நிலைத்து விளையாடும் தன்மையும் கொண்டவராக உள்ளார். இவருக்கு பக்கபலமாக மஹமதுல்லா இருக்கிறார். அவரும் அணியின் நிலை அறிந்து விளையாடுபவர். இந்த உலக கோப்பையில் இவர்கள் எதிரணிக்கு பெரிய சவாலாக இருக்கின்றனர்.

Quick Links