உலகக் கோப்பையில் கலக்க காத்திருக்கும் ஆல் ரவுண்டர்கள் பகுதி-2

ஹர்திக் பாண்டியா மற்றும் கேதர் ஜாதவ்
ஹர்திக் பாண்டியா மற்றும் கேதர் ஜாதவ்

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்க்கும் அணிகள் தற்போது பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். ஆல் ரவுண்டர்கள் செயல்பாட்டை பொருத்தே அணிகளின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு அணியிலும் ஆல் ரவுண்டர்களின் பங்களிப்பு குறித்த தொகுப்பை காணலாம்.

இந்தியா

இந்திய அணியை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா அனைத்து நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக வலம் வருகிறார். இளம் வீரரான இவர் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். பாண்டியாவிற்கு அடுத்து கேதர் ஜாதவ் இந்தியாவிற்கு கூடுதல் பலமாக உள்ளார். பேட்டிங்கில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பகுதி நேர பந்து வீச்சாளர் என்றாலும் இக்கட்டான நேரத்தில் பல விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்ற இரண்டு ஆல் ரவுண்டர்கள் ரவீந்த்ர ஜடேஜா மற்றும் விஜய் சங்கர். இவர்கள் அணியில் இடம் பெறும் பட்சத்தில் அவர்களுக்கான பொறுப்பை திறம் பட செய்யும் ஆற்றல் பெற்றவர்கள்.

பாகிஸ்தான்

ஷடாப் கான்
ஷடாப் கான்

பாகிஸ்தான் அணியில் அனுபவம் உள்ள ஆல் ரவுண்டர்கள் என யாரையும் குறிப்பிட முடியாது. ஆனால், பவுலிங் ஆல் ரவுண்டரான ச்டாப் கான் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களில் இவரது பந்துவீச்சு எதிர்கொள்வது கடினமானதாகவே உள்ளது. மாலிக்,ஹபீஸ் போன்றவர்கள் பேட்ஸ்மேன்கள் என்றாலும் பந்துவீச்சில் தேவைப்படும் போது விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்டவர்கள்.

நியூசிலாந்து

காலிங் டி கிராண்ட் ஹோம்
காலிங் டி கிராண்ட் ஹோம்

நியூசிலாந்து அணியில் காலிங் டி கிராண்ட் ஹோம் மற்றும் ஜேம்ஸ் நேஷம் ஆகியோர் உலக கோப்பையில் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணியில் இடம் பெற்ற காலிங் டி கிராண்ட் ஹோம் பெரிதாக சாதிக்கவில்லை என்று சொல்வதைவிட பெங்களூரு அணி அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும். பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அதிரடி காட்டும் அசாத்திய திறன் உள்ளவர். இதேபோன்று நேஷம் பவுலிங்கில் சிறந்த பார்மில் உள்ளார். பேட்டிங்கிலும் இவர் இறுதி நேரத்தில் கை கொடுக்க கூடியவர் என்பதால் ஆட்டத்தின் போக்கை மாற்றலாம்.

ஆஸ்திரேலியா

கிளேன் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ்
கிளேன் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ்

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரராகவும் கேப்டனுக்கு அறிவுரை வழங்கும் நபராகவும் இருப்பவர் கிளேன் மேக்ஸ்வெல் இவரது அதிரடியை சமாளிக்க முடியாமல் அனைத்து அணிகளும் திணறுகின்றன. அனைத்து முன்னணி வீரர்களின் பந்துவீச்சை சிதறடிக்கக் கூடியவர். இதன் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். மற்றொரு முக்கியமான வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கைக்குரிய வீரர்களில் ஒருவர் ஆக மாறி வருகிறார். இவர் ஒரு போட்டியில் பேட்டிங்கில் நன்றாக செயல் பட்டால் அடுத்த போட்டியில் பவுலிங்கில் சிறப்பாக செய்படுபவராக இருக்கிறார்.

ஆப்கானிஸ்தான்

முகமது நபி மற்றும் ரஷித் கான்
முகமது நபி மற்றும் ரஷித் கான்

ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்க படும் அணிகளில் ஒன்றாக உள்ளது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி கண்டிப்பாக கலக்குவார் என எதிர் பார்க்கப்படுகிறது. பேட்டிங் பவுலிங்கில் இவர் வேகமாக வளர்ந்து வருகிறார். இவரது சுழற்பந்து வீச்சை அடிப்பதற்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் சிரமப்படுகின்றனர். அத்துடன் முன்னணி பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் திறனும் இருப்பதால் நபி களத்தில் இருந்தால் எதிரணிக்கு நெருக்கடி. இவருடன் ரஷித் கானும் தனது மாயாஜால சுழல் மற்றும் அதிரடி பேட்டிங்காலும் அசத்துவார். இருவரும் ஐசிசி டாப் 10 தர வரிசையில் உள்ளனர்.

Quick Links

App download animated image Get the free App now