ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலியா vs இந்தியா
ஆஸ்திரேலியா vs இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி முரளி விஜய், ரோகித் சர்மா,பார்திவ் படேல் ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.முரளி விஜய் இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கழட்டி விடப்பட்டார். ரோகித் சர்மா,பார்திவ் படேல் ஆகிய இருவரும் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்குப் பிறகு டெஸ்ட் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டனர்.

காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்து பென்ஜில் உட்கார வைக்கப்பட்ட மயான்க் அகர்வால் டெஸ்ட் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.

கடைசி ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 2-0 என தொடரை இழந்தது. ஆனால் இந்த சமயம் ஆஸ்திரேலியா அணி இருபெரும் டெஸ்ட் வீரர்களான டேவிட் வார்னர்,ஸ்டிவ் ஸ்மித் இல்லாமல் தவித்து வருகிறது. இதுவே இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் இங்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய அணி வீரர்களைப்பற்றி காண்போம்.

#5.கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல் டெஸ்ட், ஓடிஐ மற்றும் டி20 ஆகிய மூன்று போட்டிகளிலும் விளையாடும் சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார். தற்போது இவர் ஓடிஐ, டி20 போட்டிகளில் ஆட்டத்திறன் சிறப்பாக உள்ளது. ஆனால் டெஸ்ட் தொடரில் சிறிது குறைவாகவே ஆட்டத்திறன் உள்ளது.

ராகுல் ஒரு நல்ல டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனால் இவருக்கு ஒரு சீரான ஆட்டம் தேவை. ராகுல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முக்கிய வீரராக இந்திய அணியில் களமிறங்கப்போகிறார். அவருக்கு ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவம் உள்ளது. இவருடைய டெஸ்ட் அறிமுக போட்டியே ஆஸ்திரேலியாவிற்கெதிராக அமைந்தது. அப்பொழுது 2வது டெஸ்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.

ராகுல் அதிவேகமாக ரன்குவிப்பதில் அனுபவம் வாய்ந்தவராகவும் , பவுண்டரி மைதானங்களில் நல்ல ஷாட்களை அடித்து விளையாடுவதில் வல்லவராகவும் உள்ளார். இங்கிலாந்திற்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ராகுலை வைத்து பார்க்கும்போது அதிக நேரம் நிலைத்து நின்று ஆடவும் தகுதியான பேட்ஸ்மேனாக ராகுல் உள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இவருக்கு ஒரு முக்கியமான தொடராக இருக்கும். இவர் கண்டிப்பாக தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இந்த தொடரே இவர் டெஸ்ட் அணியில் இருப்பதை தீர்மானிக்கும் தொடராக இவருக்கு அமையும்.

#4.ரோகித் சர்மா

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

ரோகித் சர்மா இந்ததொடரில் ஏதாவது ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடும் XI ல் இடம்பெற்றால் அவருக்கு இது ஒரு கம்-பேக் போட்டியாக அமையும்.

ரோகித் சர்மா கடைசியாக தென்னாப்பிரிக்கா தொடரில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அடுத்து டெஸ்ட் அணியிலிருந்து அவர் கழட்டிவிடப்பட்டார். கடைசி டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடததால் இந்த தொடர் ரோகித் சர்மாவிற்கு ஒரு முக்கியமான டெஸ்ட் தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் தமது இடத்தை தக்கவைக்க வேண்டுமெனில் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் தனது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்த வேண்டும். கடைசி ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா பேட்டிங் நன்றாக இல்லை. ஆனால் தற்போது நல்ல ஆட்டத்திறனில் உள்ளார். எனவே டெஸ்ட் தொடரில் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிஐ, டி20 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது சந்தேகமில்லாத உண்மையாகும்.ஆனால் அவர் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிருபிக்கவில்லை.எனவே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா ஒரு கவனிக்கப்பட வேண்டிய வீரராக உள்ளார்.

#3.ரிஷப்‌ ஃபண்ட்

ரிஷப்‌ ஃபண்ட்
ரிஷப்‌ ஃபண்ட்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரிஷப் ஃபண்ட் இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பிங்கில் பரிந்துரைக்கப்படும் முக்கிய வீரராக உள்ளார். இவர் இரு 90+ ரன்களை மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் அடித்துள்ளார். இங்கிலாந்தில் ஒரு சதத்தினை விளாசியுள்ளார்.

ரிஷப்‌ ஃபண்ட் இந்த ஆட்டத்திறனை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் விக்கெட் கீப்பிங்கில் சிறிது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவருடைய விக்கெட் கீப்பிங் அவ்வளவாக சோபிக்கவில்லை.

ரிஷப்‌ ஃபண்ட் நிரந்தரமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவேண்டுமானால் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். எனவே ரிஷப் ஃபண்ட் இந்த தொடரில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு வீரராக உள்ளார்.

#4.ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு டெஸ்ட் தொடரிலும் சிறப்பான ஆல்ரவுண்டர் ஆட்டத்திறனை ஜடேஜா வெளிப்படுத்தியுள்ளார். அஸ்வினுடன் ஒப்பிடுகையில் ஜடேஜா நல்ல ஆட்டத்திறனில் உள்ளார். எனவே அவர் முதல் டெஸ்டிற்கு பரிந்துரைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இங்கிலாந்து ஆடுகளத்தில் பேட்டிங் & பௌலிங் என இரண்டிலும் அசத்தியுள்ளார் ஜடேஜா. இந்த ஆட்டத்திறனை இனிவரும் போட்டிகளில் சீராக வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜடேஜா ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு போட்டி கூட விளையாடியதில்லை. எனவே இந்த டெஸ்ட் தொடரில் அவருடைய பேட்டிங் & பௌலிங்கில் ஆஸ்திரேலிய மண்ணில் எவ்வாறு அமையும் என காண அனைவரும் விறுவிறுப்புடன் காத்துள்ளனர்.

#1.பிரித்வி ஷா

பிரித்வி ஷா
பிரித்வி ஷா

இவர் இந்த வரிசையில் கடைசி வீரராக உள்ளார். பிரித்வி ஷா ஒரு நம்பிக்கைக்கு உரிய இளம் கிரிக்கெட் வீரர் ஆவார்.

இவர் சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தனது அறிமுக போட்டியின் முதல் இன்னிங்சிலேயே ஒரு வரலாற்று சதத்தினை பதிவு செய்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் 237 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரில் கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்து: அப்துல் ரகுமான்

மொழியாக்கம்: சதீஸ்குமார்

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now