ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிக் பாஷ் லீக்கில் வருடத்திற்கு வருடம் புது புது வேறுபட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது . இவ்வருடம் காய்ன் டாஸிற்குப் பதிலாக பேட் மூலம் டாஸ் போடும் வழக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது .
உலகில் அதிகமானோரால் விரும்பப்படும் கிரிக்கெட் போட்டியில் இதுவரை காய்ன் மூலம் டாஸ் செய்து யார் முதலில் பேட்டிங் / பௌலிங் செய்வது என தீர்மானிக்கப்பட்டு வந்தது. காய்ன் டாஸில் ஹெட் மற்றும் டெய்ல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது . பேட் டாஸில் ஹில்ஸ் மற்றும் ஃப்ளாட் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட உள்ளது.
தற்போது நடைபெறவுள்ள பிக் பாஷ் லீக்கில் பேட்டை சுற்றி பேட்டின் தன்மைக்கேற்ப ஹில்ஸ் மற்றும் ஃப்ளாட் என்ற வார்த்தை மூலம் பேட்டிங் மற்றும் பௌலிங் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
நாம் கடற்கரை மற்றும் தெருக்களில் கிரிக்கெட் விளையாடும்போது சில சமயம் இந்த பேட் டாஸினை முயற்சி செய்திருப்போம். ஆனால் டாஸ் செய்த பேட்டினால் நாம் கிரிக்கெட் விளையாடும் போது சராசரியான விளையாட்டு திறனை வெளிபடுத்த முடியாது.
இந்த பேட் டாஸ் இரு அணிகளுக்கும் சமமில்லாத ஹில்ஸ் மற்றும் ஃப்ளாட் என்ற வார்த்தையின் மூலம் பேட்டிங்/ பௌலிங் முடிவை தேர்ந்தேடுக்க சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காய்ன் டாஸ் போடுவது போலவே பேட்டையும் தகுந்தவாறு சுழற்றப்படும்.
சில நாட்களுக்கு முன்னர் கிறிஸ் லின் " பிரிஸ்பேன் ஹீட்ஸ் " அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் . பிக் பாஷ் வரலாற்றில் முதல் முறையாக டிசம்பர் 19ல் பேட் மூலம் இவரே டாஸ் செய்து ஆரம்பித்து வைக்க உள்ளார்.
ஏபிசி. நெட் வெளியிட்ட அறிக்கையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் பிக் பாஷ் தொடரின் தலைவரான " கைம் மெக்கோனி " கூறியதாவது : இது கிரிக்கெட் விளையாட்டில் ஒரு புது மாற்றமாக அமையும். ஆஸ்திரேலியா பேட்டிங் வடிவமைப்பு நிறுவனமான " கொக்கும்ரா " - விடம் ஆலோசனை செய்து டாஸ் செய்ய தகுந்தவாறு பேட் வடிவமைக்கப்பட்டு சோதனையும் செய்யப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து டாஸ் போடும் வழக்கம் காய்ன் மூலமே போடப்பட்டு வருகிறது . இந்த காய்ன் டாஸ் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப மாறி உள்நாட்டு வீரர்களுக்கு சாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது. 2019 பிக் பாஷ் சீசனின் மூலம் சர்வதேச கிரிக்கெட் வாரியமும் டாஸ் போடும் போது காய்னிற்கு பதிலாக பேட் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
சில பேருக்கு தற்போது இந்த பேட் டாஸ் முறை பிடிக்காமல் கூட போகலாம். இந்த பிக்பாஷ் தொடருக்குப் பிறகு அவர்களுக்கும் இந்த பேட் டாஸ் முறை பிடிக்கும். காய்ன் டாஸ் மூலம் பேட்டிங் மற்றும் பௌலிங் தேர்ந்தெடுக்க நாம் ஒன்றும் குழந்தைகள் அல்ல என்று கைம் மெக்கோனி கூறியுள்ளார் .
பிக் பாஷ் லீக்கில் பெய்ல்ஸ் மீது பந்து பட்டால் லைட் எறியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
எழுத்து : ஆத்யா சர்மா
மொழியாக்கம் : சதீஸ்குமார்