2019 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கோலாகளமாக நடைப்பெற்று வருகிறது. இதுவரை 24 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இந்த 24 லீக் போட்டிகளில் பேடஸ்மன் மற்றும் பவுலர்கள் என அனைவரும் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
இங்கிலாந்து போன்ற பலம்வாய்ந்த அணியில் இருக்கும் சிறந்த வீரர்கள் தங்களது பேட்டிங்கில் அதிக ரன்கள் குவித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பல சதம் மற்றும் அரைசதங்கள் குவித்துள்ளனர். இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இந்த உலகக் கோப்பையில் பல சாதனைகளை படைத்துள்ளனர். எனவே, தற்போது ஒருநாள் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தனிநபர் 150 ரன்கள் கொண்ட அணிகளைப் பற்றி பார்ப்போம்.
#1. இந்திய அணி (28)
28 முறை 150-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து முதல் இடத்தில் உள்ளனர் இந்திய பேட்ஸ்மேன்கள். ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 150 ரன்கள் எடுத்த இந்தியாவுக்கான வீரராக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் 7 முறை 150 ரன்கள் அடித்துள்ளார். ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் தனது சிறந்த ஒருநாள் வாழ்க்கையில் 5 முறை 150-க்கும் மேற்பட்ட ரன்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். 2010 ல் குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சச்சின் தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார்.
'இந்தியாவின் ரன் மெஷின்' விராட் கோலி தனது ஒருநாள் வாழ்க்கையில் 4 முறை 150 ரன்கள் தாண்டினார். சவுரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக், மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோரும் இரண்டு முறை 150-க்கும் மேற்பட்ட ரன்கள் கொண்டுள்ளனர். ராகுல் திராவிட், கபில் தேவ், யுவராஜ் சிங், எம்.எஸ். தோனி, மற்றும் முகமது அசாருதீன் அனைவரும் தங்கள் ஒருநாள் வாழ்க்கையில் ஒரு முறை 150 ரன்கள் அடித்துள்ளார். தினேஷ் மோங்கியா 2002 ல் குவாஹாட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 159 ரன்கள் எடுத்துள்ளார்.
#2. ஆஸ்திரேலியா அணி (20)
ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் 20 முறை 150-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளனர். இதில் டேவிட் வார்னர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 5 முறை 150-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 179 ஆகும், இது 2017 ஆம் ஆண்டில் அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்தது. இரண்டாவதாக, பட்டியலில் தற்போதைய ஆஸி கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் போட்டிகளில் 150 ரன்களை இரண்டு முறை குவித்துள்ளார்.
பிஞ்ச் மற்றும் வார்னர் ஆகியோருடன் ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யு ஹேடன், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் இணைந்துள்ளனர், அவர்கள் அனைவரும் ஒருநாள் போட்டிகளில் 150 ரன்களை இரண்டு முறை தாண்டினர். 2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரபலமான ஒருநாள் போட்டியில், ரிக்கி பாண்டிங் 150 ரன்கள் எடுத்துள்ளார்.