உலககோப்பை தொடரின் இறுதி லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை வந்த முடிவு படி ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு 5 வது இடமே கிடைத்தது. இந்நிலையில் இந்திய அணியானது தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை சந்தித்தது. இந்த போட்டியானது லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் சகால் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி இலங்கை அணி சார்பில் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் புவனேஷ்வர் குமார் ஓவர்களை வெளுத்து வாங்கி துவக்கம் தத்தனர். ஆனால் பும்ராவின் பந்தை இவர்கள் அடிக்க கூட தடுமாறி வந்தனர். பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் இலங்கை அணியின் கேப்படனான கருணரத்னே 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தோனியிடம் கேட்ச் ஆனார். அதன் பின் அந்த அணியின் இளம் நட்சத்திர வீரரான அவிஷ்கா பெர்னால்டோ களமிறங்கினார். இவர் குசால் பெரேராவுடன் இணைந்து புவனேஷ்வர் குமார் ஓவரை மட்டும் குறி வைத்து தாக்கி வந்தனர். அணியின் ஸ்கோர் 40 ஆக இருக்கும் போது குசால் பெரேரா 18 ரன்களுக்கு பும்ராவின் பந்திற்கு இறையானார். பின் வந்த குசால் மெண்டிஸ் 3 ரன்களுக்கு தனது விக்கெட்டை ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். அடுத்த ஓவரிலேயே அவிஷ்கா பெர்னால்டோவும் ஹார்திக் பாண்டியாவிடம் தனது விக்கெட்டை இழக்க இலங்கை அணி 55 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. போகும் நிலையை பார்த்தால் 150 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்ற நிலையில் இருந்தது.
அதற்கு பின் தான்.மேத்யூஸ் மற்றும் திரிமண்னே இணைந்தனர். இந்த ஜோடி விக்கெட்டை இழப்பை தடுத்து நிறுத்தி நிலைத்து ஆடத்துவங்கியது. இருவரும் நிதானமாக ஆடி கிடைக்கும் பந்துகளை மட்டும் பவுண்டரிகளாக மாற்றியும் ரன்களை குவித்து வந்தனர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை கடந்தனர். இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் குவித்தனர். திரிமண்னே 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவின் சுழலில் சிக்கி தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின் தனஜெயா டி சில்வா களமிறங்கினார்.இவர் நிதானமாகவே ஆடி வர மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த மேத்யூஸ் சர்வதேச ஒருநாள் பேட்டிகளில் தனது மூன்றாவது சதத்தினை பதிவு செய்தார். இறுதியில் அவரும் 113 ரன்களில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழக்க இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 264 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும், மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.