ரோஹித் சர்மாவின் சாதனையுடன் இந்திய அணி வெற்றி

Pravin
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில் டி-20 தொடரில் முதல் போட்டி கடந்த 4ம் தேதி நடைபெற்றது அந்த போட்டியில் இந்திய அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. இன்று இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வேன்ற நியூசிலாந்து அணி முதலில் பேடிங்கை தேர்வு செய்தது.

அதன் படி களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக முண்ரோ மற்றும் டிம் செரிபெர்ட் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே 12 ரன்னில் டிம் செரிபெர்ட் புவனேஷ்வர் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த வில்லியம்சன் நிலைத்து விளையாட அடுத்தாக முண்ரோ 12 ரன்னில் க்ருநாள் பாண்டிய பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய டேரில் மிட்செல் 1 ரன்னில் க்ருநாள் பாண்டிய பந்தில் அவுட் ஆகினார்.

குருநாளல்பாண்டிய
குருநால்பாண்டியா

அடுத்தாக களம் இறங்கிய ராஸ் டெய்லர் நிலைத்து விளையாட மறுபுறம் நிலைத்து விளையாடிய கேப்டன் வில்லியம்சன் 20 ரன்னில் க்ருநாள் பாண்டிய பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய கோலின் டி க்ராண்டோம் அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக 4 சிக்ஸ்சர் மற்றும் 1 பவுண்டரி உடன் 28 பந்தில் அரைசதம் கடந்தார். இதனை அடுத்து 50 ரன் எடுத்த நிலையில் ஹார்டிக் பாண்டிய பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடி ராஸ் டெய்லர் 42 ரன்னில் விஜய் சங்கரிடம் ரன் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய சாட்னேர் 7 ரன்னில் கலீல் அஹ்மத் பந்தில் அவுட் ஆகினார். சௌதீ 3 ரன்னில் கலீல் அஹ்மத் பந்தில் அவுட் ஆக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்களை எடுத்தது.

டி20 அதிக ரன் ஸ்கோரர் ரோஹித் சர்மா
டி20 அதிக ரன் ஸ்கோரர் ரோஹித் சர்மா

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் தவாண் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாட இந்திய அணி வலுவான நிலைக்கு சென்றது. ரோஹித் சர்மா இன்று சாதனை நாள் என்றே சொல்லலாம் டி20 போட்டிகளில் இன்று பல சாதனைகளை படைத்தார். ரோஹித் சர்மா. அதில் முக்கியமானது டி20 போட்டிகளில் அதிக ரன்களை அடித்தவர் என்ற சாதனையை நியூசிலாந்து அணி வீரர் மார்டின் கப்தில் இடம் இருந்து பறித்து கொண்டார். இதற்குமுன் மார்டன் கப்தில் 2272 ரன்கள் எடுத்ததே டி20 போட்டிகளில் அதிக ஸ்கோராக இருந்தது. அதனை ரோஹித் சர்மா 2285 ரன்கள் எடுத்து இன்று முறியாடித்தார். இதை அடுத்து இந்திய அணியில் ரோஹித் சர்மா 50 ரன்களும் , தவாண் 30 ரன்களும், பன்ட் 40 ரன்களும் , தோனி 20 ரன்னும் எடுத்து இந்திய அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். இந்திய அணி டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன் உள்ளது.

Quick Links