Create

4ம் இடத்திற்கு ஏன் கே.எல் ராகுல் தகுதியானவர் ?

Ind vs wi : 1st odi match
Ind vs wi : 1st odi match
Vidhusons

சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் வென்று தொடரை நிறைவு செய்தது. இந்த செயல்பாட்டில் அவர்கள் தற்போதைய ஆறு டி 20 போட்டிகளில் வென்று தற்போதைய உலக டி 20 சாம்பியன்களை வீழ்த்திய முதல் அணியாக திகழ்கின்றனர்.

இப்போது இந்திய அணியின் கவனம் ஒருநாள் சர்வதேச தொடருக்கு மாறுகிறது. முதல் போட்டி வியாழக்கிழமை கயானாவில் தொடங்குதிறது. உலகக் கோப்பை தொடரில் ஓரளவிற்கு நன்றாகவே இந்திய அணி விளையாடியது. ஏனெனில் அவர்கள் லீக் கட்டத்தில் ஒரு ஆட்டத்தை மட்டுமே இழந்து புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்தனர். லீக் போட்டியின் போதும் மற்றும் அரையிறுதிக்கு முன்னதாக இந்தியாவின் முக்கிய பேட்டிங் வரிசை, குறிப்பாக நான்காவது இடம் பெரும் பாதிப்பாக இருந்தது. ஒரு நிலையான நடுத்தர பேட்டிங் இல்லாதது இந்தியா உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறியதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கு இந்தியா அணி மணீஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்தனர். இருப்பினும், பார்வையாளர்கள் மிகவும் விவாதிக்கப்பட்ட 4 வது இடத்திற்கு கே.எல்.ராகுலுடன் விளையாடுவது சிறந்த யோசனையாக இருக்கலாம் என்று தங்களது கருத்துக்களை இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.

Why KL Rahul is India's ideal No. 4 for the ODI series
Why KL Rahul is India's ideal No. 4 for the ODI series

உலகக் கோப்பையின் முதல் சில ஆட்டங்களில் வலது கை பேட்ஸ்மனான கே.எல் ராகுல் ஒர் சிறப்பான பயணத்தை மேற்கொண்டார். ஆனால் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானின் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார். இதனால் 4ம் இடத்தில் களமிறங்கிய கே.எல் ராகுலை தொடக்க ஆட்டக்காரராக உயர்த்தும்படி இந்தியாவை கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மேற்கொள்ளும் சுற்றுபயணத்தின் ஓடிஐ தொடரில் ஷிகர் தவானின் வருகை ராகுலை மீண்டும் நடுத்தர வரிசையில் விளையாட தள்ளியுள்ளது. ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் தன்னை நிலைநிறுத்தவில்லை. வலதுகை பேட்ஸ்மனான அந்த நிலையில் இந்தியாவுக்காக விளையா அவருக்கு நான்கு வாய்ப்புகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால் உண்மையான செயல்பாடைக் காண இந்திய அணி நிர்வாகம் அவருக்கு அந்த இடத்தில் ஒரு நீண்ட கயிற்றைக் கொடுப்பது நல்லது. ஒரு சில மோசமான செயல்திறன்களுக்குப் பிறகு வீரர்களைக் கைவிடுவதன் மூலம் அவர்கள் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி இன்னும் நிலையற்ற நடுத்தர ஒழுங்கை பெறாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

Kl rahul
Kl rahul

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட மணீஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான வடிவத்தில் இருப்பதால் இந்தியாவின் 4ம் இடத்திற்கு சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இருப்பினும், ராகுலின் செயல்திறனில் பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவர்களை அணியில் சேர்ப்பது நல்ல யோசனையாக இருக்காது. இது பல முறை பக்கத்திலும் வெளியேயும் இருந்த ராகுலின் நம்பிக்கையைத் தூண்டும். ஏராளமான திறமைகளைக் கொண்ட கே.எல் ராகுலுக்கு நிர்வாகம் முயற்சி செய்து விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும். ஒன்று அவர் ஒரு தொடக்க வீரராக அல்லது ஒரு நடுத்தர வரிசை பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, உலகக் கோப்பையின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே இந்தியாவும் நடுத்தர வரிசையில் ராகுல் விளையாடுவது சிறப்பாக இருக்கும்.


Edited by Fambeat Tamil

Comments

Quick Links

More from Sportskeeda
Fetching more content...