இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்கான தகவல்கள் மற்றும் ஃபான்டஸி (Fantasy) குறிப்புகள் : 

Australia vs India 1st T20I
Australia vs India 1st T20I

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சொந்த மண்ணில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக அஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்கின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் என இந்திய அணி பங்கேற்கவுள்ள்ளது.

இவற்றில் இரு அணிகளும் முதலாவதாக டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலாவது போட்டி நவம்பர் 21ஆம் தேதி(நாளை) பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது.

இவற்றில் உங்களது ஃபான்டஸி அணியை உருவாக்க சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

இந்தியா :

இந்திய அணியை பொருத்த வரை முதல் போட்டியில் பங்கேற்க்கவிருக்கும் 12 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அறிவித்துள்ளது. எனினும் சஹால் 12 ஆவது வீரராக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்தியா அணி விவரம்: கோஹ்லி (தலைவர்), ரோகித் (துணை தலைவர்), தவாண், ராகுல், கார்த்திக், பான்ட் (வி. கீ), குருனல், குல்தீப், பு. குமார், பும்ரா, கலீல், சஹால்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஒய்வு பெற்ற கோஹ்லி மற்றும் கடைசி போட்டியில் ஒய்வு பெற்ற குல்தீப் மற்றும் பும்ரா போன்ற வீரர்களின் வருகை அணிக்கு பலம் ஆகும்.

இந்தியா அணியின் டாப் ஆர்டரில் ரோகித், தவாண் மற்றும் ராகுல் ரன் வேட்டை நடத்தவுள்ளனர். மிடில் ஆர்டரில் கோஹ்லி, கார்த்திக், பான்ட், குருனல் விளையாட உள்ளார்கள்.

பந்துவீச்சில் பும்ரா மற்றும் குல்தீப் விக்கெட்டு வேட்டை நடத்தலம்.

முதல் டி20 போட்டியின் ஃபான்டஸி அணியில் கட்டாயம் இடம்பெற வேண்டிய இந்திய வீரர்கள் : தவாண், கோஹ்லி, பான்ட், குல்தீப், பும்ரா.

கார்த்திக் மற்றும் குருனல் சிறந்த பார்மில் இருந்தாலும் மிகவும் தாமதமாக பேட்டிங் செய்ய வருவதால் அதிக பாய்ண்டுகள் எடுக்க வாய்ப்பில்லை.

ஆஸ்திரேலியா :

ஆஸ்திரலியா அணியின் கணிக்கப்பட்ட அணி : பின்ச் (தலைவர்), ஷார்ட், லின், மேக்ஸ்வெல், மெக்டர்மட், ஸ்டாய்னிஸ், கேரி, டை, நாதன் கூல்ட்டர் நைல், ஸ்டன்லேக், பெஹன்ட்ராஃப்.

ஆஸ்திரேலியா அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் ஒருநாள் மற்றும் டி20 தொடர்ளை இழந்துள்ளது ஆகையால் இந்தியா அணிக்கு எதிரான தொடரில் வெல்லும் முனைப்புடன் உள்ளன.

ஆஸ்திரேலியா அணியின் வீரர்களும் சமீபத்தில் நடைபெற்ற தொடர்களில் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர். ஆகையால் ஃபான்டஸி அணியில் நிறைய ஆஸ்திரேலியா வீரர்களை எடுப்பதை தவிர்க்கலாம்.

ஆஸ்திரேலியா அணியில் டாப் ஆர்டெரில் பின்ச், ஷார்ட் மற்றும் லின் அதிக ரன்களை சேர்க்க வாய்ப்புள்ளது.

ஆஸி. அணிக்கு டி20 போட்டிகளில் பலம் சேர்க்கும் மேக்ஸ்வெல் ஃபான்டஸி அணிக்கும் பலம சேர்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஃபான்டஸி அணிக்கு ஆஸ்திரேலியா அணியிலிருத்து கட்டாயம் இடம்பெற வேண்டிய வீரர்கள் : மேக்ஸ்வெல், டை, ஸ்டாய்னிஸ், நாதன் கூல்ட்டர் நைல்

இவற்றில் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் கூல்ட்டர் நைல் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் பலம் சேர்ப்பார்கள். டை கடைசிகட்ட ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவார்.

Quick Links

App download animated image Get the free App now