இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்க்கொண்டு ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஒரு நாள் போட்டி தொடரை விளையாடி வரும் நிலையில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவுள்ளது. இந்த நிலையில் இன்று நான்காவது ஒரு நாள் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணியில் தோனிக்கும் ஒய்வு அளிக்கப்பட்ட நிலையில் கலில் அகமது மற்றும் அறிமுக வீரராக சுப்மான் கில் களம் இறங்கினர். நியூசிலாந்து அணியில் நீசம் புதியதாக களம் இறங்கினார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய இந்திய அணியில் 200 மேட்சில் களம் இறங்கும் ரோஹித் சர்மா மற்றும் தவாண் களம் இறங்கினர். ரோஹித் சர்மா 7 ரன்னில் போல்ட் ஓவரில் அவுட் ஆகினார். தவாண் 13 ரன்கள் போல்ட் ஓவரிலும் அடுத்தாக களம் இறங்கிய சுக்குமான் கில் 9 ரன்னில் போல்ட் ஓவரிலும் தொடர்ந்து அவுட் ஆகினர். அதனை தொடர்ந்து களம் இறங்கிய ராய்டு கீராண்ட்ஹோம் ஓவரில் டக் அவுட் ஆகினார் . அதே ஓவரில் தொடர்ந்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகினார். கீராண்டகோம் விசிய 11 வது ஓவர் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய கேதர் ஜதாவ் 1 ரன்னில் போல்ட் ஓவரில் விக்கெட்டை இழந்தார். இவரை அடுத்து களம் இறங்கிய புவனேஷ்வர் குமார் 1 ரன்னில் கீராண்ட்ஹோம் ஓவரில் அவுட் ஆகினார். ஹார்திக் பாண்டியா சிறிது தாக்குபிடித்து 16 ரன்னில் போல்ட் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். இவரை அடுத்து களம் இறங்கிய குல்திப் மற்றும் சாஹல் இணை சிறிது நேரம் நிலைத்து விளையாடியது. குல்திப் 15 ரன்னில் அஸ்லே ஓவரில் அவுட் ஆகினார். இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 92 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் போல்ட் 5 விக்கெட்களை வீழ்த்தினார். கீராண்ட்ஹோம் 3 விக்கெட்டை வீழ்த்தினார். இதனை அடுத்து நியூசிலாந்து அணிக்கு 93 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

இதை அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் கப்தில் மற்றும் நிக்ளோஸ் களம் இறங்கினர். கப்தில் 14 ரன்னில் புவனேஷ்வர் குமார் ஓவரில் ஆவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்னில் புவனேஷ்வர் குமார் ஓவரில் அவுட் ஆகினார் நிக்ளோஸ் 30 ரன்களுடனும் ராஸ் டெய்லர் 37 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்திய அணியில் புவனேஷ்வர் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 93 -2 இலக்கை அடைந்து வெற்றி பெற்றனர். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்தின் போல்ட் தேர்வு செய்யப்பட்டார் .
பின்னர் தோல்வி குறித்து ரோஹித் சர்மா கூறியாதவது : "நாங்கள் நிறைய ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் மோசமான பேட்டிங்கை செய்துள்ளோம் . நாங்கள் விளையாடிய போட்டிகளிலே இது தான் படுமோசம். நியூசிலாந்து பவுலர்களுக்கு தான் இந்த வெற்றி சேரும் . நாங்கள் தவறான ஷாட்ஸ் தேர்ந்து எடுத்ததே இதற்கு காரணம்" என்றார் .
பின்னர் பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது : "நாங்கள் நினைத்தது போலவே இந்த ஆடுகளம் இருந்தது. நாங்கள் நினைத்து கூட பார்க்க வில்லை இந்திய அணியை 90 ரன்களில் ஆட்டம் இலக்க செய்வோம் என்று. அனைத்தும் எங்கள் அணியின் பவுலர்களுக்கு தான் சேரும். இந்த மைதானம் எப்போழுதும் ஒரு மாதிரியான தன்மையை உடையது" என்றார்.