நியூசிலாந்து :
நான்காவது போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் களமிறங்க உள்ளது நியூசிலாந்து அணி, இப்போட்டியில் காயம் காரணமாக குப்டில் அணியில் இருந்து விலகியுள்ளார் மற்றும் முதல் மூன்று போட்டிகளில் ஏமாற்றம் அளித்த முன்ரோ மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
பேட்டிங் :
சென்ற போட்டியில் நியூசிலாந்து அணி வென்றிருந்தது. இருந்தபோதிலும் தனது டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சென்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த போட்டிக்கு புதிய உத்வேகத்துடன் களம் காண்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சென்ற முறை இந்த மைதானத்தில் இவ்விரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வில்லியம்சன் மற்றும் டெய்லர் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தது நினைவுக் கொள்ளவேண்டியவை, நாளை நடக்கவுள்ள போட்டியிலும் இது நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு பேட்டிங்கில் புதிய மாற்றங்களை தேடி நாளைய போட்டியில் மாற்றங்களை நியூஸிலாந்து எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பந்துவீச்சு:
நான்காவது போட்டியில் அசத்திய ட்ரெண்ட் போல்ட் அடுத்த போட்டியில் இந்திய அணியை அச்சுறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் பேட்ஸ்மென்களை விரைவில் வெளியேற்றி வருகிறார், இந்த மைதானத்தில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்கள்.
கிராண்ட்ஹோம், ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற பேட்ஸ்மேன்களை வெளியேற்றி நல்ல பார்மில் உள்ளார்.
எதிர்பார்க்கப்படும் அணி:
முன்ரோ, நிக்கோல்ஸ், வில்லியம்சன், டெய்லர், லாதம், கிராண்ட்ஹோம், நீஷம், சண்ட்னர், அஸ்ட்லே, ஹென்றி, போல்ட்.