இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி எளிதில் நியூசிலாந்து அணியை வென்றது . இந்த நிலையில் இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி பை-ஓவலில் நடைபெற்றது . இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . அதன் படி களம் இறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை தொடங்கியது . ரோஹித் 81 , தவாண் 66, கோலி 43 , ராய்டு 47, தோனி 48 ரன்களை அடித்து இந்திய அணிக்கு பெரிய ஸ்கோரை சேர்த்தனர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 324-4 ரன்களை சேர்த்தது. அதன் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 325 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கியது.
சிறப்பாக இந்திய வீரர்கள் பவுலிங் செய்ததனர் . இதனால் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறியது . நியூசிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. நியூசிலாந்து அணியின் முன்னனி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இலக்க நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 234 ரன்களை மட்டும் எடுத்தது . நியூசிலாந்து அணி அதிக பட்சமாக ப்ரஸ்வால் 57 ரன்களை எடுத்தார் . இந்திய அணியில் குல்திப் யாதவ் 4 விக்கெட்களை எடுத்தார்.
இந்த போட்டியில் தோனி செய்த ஸ்டம்பிங் மிக பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து பேட்டிங்கின் போது கேதர் ஜாதவ் வீசிய 18 வது ஓவரில் நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் பேட்டிங் செய்தார். ஜாதவ் வீசிய மூன்றாவது பந்தில் தோனி செய்த ஸ்டம்பிங் மின்னல் வேகத்தில் பேட்ஸ்மெனை கால்கள் தரையில் படும் முன்னர் தோனியின் வேகத்தால் டாஸ் டெய்லர் வெளியேரினர். இந்த ஸ்டம்பிங் சிறந்த ஸ்டம்பிங்காக பார்க்கபடுகறது. இது தற்போழுது இணையத்தில் வைரலாக பரவப்படுகிறது. தோனி சிறப்பான விக்கெட் கீப்பர் என்பது அனைவரும் அறிந்ததே இந்த போட்டியில் மீண்டும் நிருபித்து உள்ளார்.
இந்த போட்டியில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் தோனி இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் தோனி கிரிக்கெட் விளையாட்டு அரங்கில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த போட்டி தோனியின் 337 வது ஒரு நாள் போட்டியாகும். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய வீரர் பட்டியலில் 3 வது இடத்தை பிடித்தார். தோனியின் சாதனை பட்டியல் அதிகரித்து கொண்டே போகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் என்ற பெறுமை உள்ளவர். தோனியின் ஸ்டம்பிங் கிங் என்பது அனைவரும் அறிந்ததே இவர் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ஸ்டம்பிங் மிக பெரிய அளவில் பேசப்படும் இந்த போட்டியிலும் மிக பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இந்திய அணி .