தோனியின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா 

Pravin
Indian team
Indian team

இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது . இதில் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நியூசிலாந்தில் உள்ள பைய் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி உள்ளது . எற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது . இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களுடன் களம் இறங்கியது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த போட்டியில் விளையாடவில்லை அவருக்கு ஓய்வு அளிக்கபட்டு தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார் . மற்றோரு மாற்றமாக பாண்டியா இந்த போட்டியில் களம் இறக்க பட்டார் . நியூசிலாந்து அணியில் சாண்ட்னர் மீண்டும் அணிக்கு திரும்பினார் . இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . அதன் படி களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்தில் மற்றும் முன்ரோ களம் இறங்கினர் .

கப்தில் 13 ரன்னிலும் முன்ரோ 7 ரன்னிலும் 6 ஓவரிலேயே தங்களது விக்கெட்களை இழந்தனர் . பின்னர் வந்த வில்லியம்சன் 28 ரன்களில் ஷாஹல் ஓவரில் அவுட் ஆகினார் . பின்னர் களம் இறங்கிய ரோஸ் டெய்லர் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . பின்னர் களம் இறங்கிய லாதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து அணி 200 ரன்களை எட்ட உதவியது . இருவரும் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தனர். லாதம் 51 ரன்னில் ஷாஹல் ஓவரில் அவுட் ஆகினார் . ரோஸ் டெய்லர் 93 ரன்னில் சமி ஓவரில் விக்கெட் இழந்தார் . பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர் . 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 243 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தனர் . இந்திய அணியில் சமி 3 , ஹாட்ரிக் பாண்டியா 2 , புவனேஸ்வர் குமார் 2 , ஷாஹல் 2 விககெட்களை வீழ்த்தினர்.

Rohit sharma
Rohit sharma

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் தவான் களம் இறங்கினர் அதிரடியை காட்டிய தவான் 28 ரன்களில் போல்ட் ஓவரில் அவுட் ஆகினார் . பின்னர் ரோஹித் சர்மா உடன் ஜோடி சேர்ந்து கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . ரோஹித் சர்மா 23. 4 பந்தில் அவர் அடித்த சிக்ஸர் மூலம் ஒரு புதி மைல் கல்லை சமன் செய்தார் . அந்த சிக்ஸர் மூலம் 215 சிக்ஸர் அடித்த தோனியின் சாதனையான இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை சமன் செய்தார் . ரோஹித் சர்மா 199 போட்டிகளில் விளையாடி 215 சிக்ஸர்களை அடித்து தோனியின் சாதனையை சமன் செய்தார் .

இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை 3-0 கணக்கில் வென்றது .

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now