இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி- 20 போட்டிகளில் விளையாடுகிறது . இதில் முதல் போட்டி நியூசிலாந்தில் உள்ள நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில் மற்றும் முன்ரோ களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கதிலேயே தடுமாறிய நியூசிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து. கேப்டன் வில்லியம்சன் நிலைத்து ஆடினார். 38 ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்த நியூசிலந்து அணி 157-10 எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 64 ரன்களும் ரோஸ் டைய்லர் 24 ரன்களும் அடித்தனர் . இந்திய அணியில் குல்திப் யாதவ் 4 விக்கெட்களையும், முகமத் சமி 3 விக்கெட்களையும், சாஹல் 2 விக்கெட்களையும், கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர் . ரோஹித் சர்மா 11 ரன்னில் அவுட் ஆகினார் . பின்னர் ஜோடி சேர்ந்த தவான் மற்றும் கோலி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 35 ஒவரில் ஐந்தாவது பந்தில் இலக்கை எட்டியது. 2009 ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்தில் இந்திய அணி பெறும் வெற்றி இதுவாகும் . தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .
இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர் தவான் 10 ரன்கள் எடுத்தபோது ஓடிஐ-யில் 5000 ரன்களை கடந்தார். 118 இன்னிங்ஸில் 5000 ரன்களை கடந்து முலம் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த விரர்களில் நான்காவது இடத்தை பெற்றார் . முந்தைய சாதனையான பிரைன் லாராவின் சாதனையை சமன் செய்தார். இந்திய வீரர்களில் முதல் இடத்தில் கோலி 114 இன்னிங்ஸில் அடித்து முதலில் உள்ளார் . இரண்டாவது இடத்தில் தவான் பிடித்தார்.
சர்வதேச அளவில் அம்லா 104 இன்னிங்ஸில் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது கோலியும் மூன்றாவது ரிசட்ஸ்வும் நான்காவது இடத்தை தவானும் லாராவும் பிடித்தனர்.
இதே போட்டியில் இந்திய வீரர் முகமத் சமி, மார்டின் கப்தில் விக்கெட்டை வீழ்த்திய போது தனது ஒடிஐ போட்டிகளில் 100 வது விக்கெட்டை வீழ்த்தினார் . இதன் முலம் இந்திய வீரர்களில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார் சமி. இதற்கு முன்னர் இந்திய முத்த வீரர்களின் சாதனையை முறியடித்தார் . இர்பான் பாதன் 59 போட்டிகளில் எடுத்ததே சாதனையாக இருந்தது அதனை 56 போட்டிகளில் வீழ்த்தி சாதனை படைத்தார் சமி.
இந்த வரிசையில் இந்திய முன்னனி முத்த வீரர்கள் ஜாம்பவான்கள் உள்ளனர் . இர்பான் பாதன் 59, ஜாகிர் கான் 65, அகார்கர் 67 என அனைவரின் சாதனையை முறியடித்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி அடைந்ததன் முலம் 2009 ஆண்டு பிறகு இந்திய அணி நியூசிலாந்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்கு சாதனைகளை குவித்துள்ளது.